அண்ணாமலையின் பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியுடன் வந்த நபர்கள். விளக்கம் அளித்த புஸ்ஸி ஆனந்த்.

0
1613
BussyAnand
- Advertisement -

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் நேற்று எட்டாவது நாளாக மதுரையில் நடைபயணத்தை மேற்கொண்டார். அதில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடிகளுடன் சிலர் அங்கு இருந்துள்ளனர். அந்த செய்தியை கூறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி .வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

புஸ்ஸி ஆனந்த் விளக்கம்:

நேற்று மதுரையில் நடைபெற்ற அண்ணாமலையிம் பாதயாத்திரையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியுடன் சிலர் அங்கு இருந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகவே, இது கூறித்து விளக்கம் அளித்து ட்வீட் செய்த விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

-விளம்பரம்-

அதில் “தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றும் அவர் தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.  

Advertisement