பொது மேடையில் சீமான், பாரதிராஜாவை தாக்கி பேசிய தனுஷ்..! இப்படியா சொன்னார்..! அதிர்ந்த அரங்கம்

0
973

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள சூப்பர் ஸ்டாரின் “காலா” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதன் முறையாக இயக்குனர் ரஞ்சித் தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். மேலும் இந்த விழாவில் அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷும் பங்குபெற்றிருந்தார்.

dhanush-kaala-audio-launch

இந்த விழாவின் போது மேடையில் பேசிய தனுஷ் அவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் பற்றி பெருமையாக பேசியதுடன் அவரை எதிர்க்கும் ஒரு சில நபர்களையும் மறைமுகமாக தாக்கியும் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய போது “வாழ்க்கையில் முன்னேற ஒரு சிலர் கடினமாக உழைத்து பல வேலைகளை செய்வார்கள், மேலும் சிலரோ(பாரதி ராஜா, சீமான் )அப்படி பிரபலமடைந்தவர்களை தாக்கி பேசி அதன் மூலம் முன்னேற நினைப்பார்கள் ” என்று பேசியுள்ளார்.

இயக்குனர் பாரதி ராஜா, சீமான் போன்றவர்கள் ரஜினியின் அரசியலை பற்றி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் பாரதிராஜா சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று சினிமா துறை பிரபலங்கள் நடத்திய போராட்டத்தின் போது ரஜினியை நேரடியாக தாக்கி பேசினார்.

இதனால் இவர்களுக்கு பதியடி கொடுக்கும் விதமாகவே தனது மாமனார் ரஜினிகாந்தை குறை கூறிய பாரதிராஜா மாற்றும் சீமான் போன்றவர்களை தான் இந்த விழாவில் நடிகர் தனுஷ் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் என்று ஒரு சில யுகங்கள் இருந்து வருகிறது.