விஜய் பேசியதை அப்படியே காப்பியடித்து விஜய் அவார்ட்ஸ் மேடையில் பேசிய தனுஷ்

0
1652
dhanush
- Advertisement -

நடிகர் தனுஷ் பன்முக திறமைகள் கொண்ட ஒரு சிறந்த கலைஞர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவின் ஒரு ஆடையாள நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ், தற்போது பிரபல ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியுள்ள ” தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகீர் ” என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

vijay awards

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் விழாவில் , நடிகர் தனுஷிற்கு ‘சிறந்த பொழுதுபோக்கு நடிகர்(best Entertainer) ‘ என்று விருது வழங்கப்பட்டது. இந்த விருது இவர் சென்ற ஆண்டு நடித்த ‘மாரி ‘ படித்திற்காக வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய தனுஷ் ” சுமாரான முகத்தை உடைய நான், ரசிகர்களின் ஆதரவால் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆனால் என்னைவிட திறமையான, அழகான பல நடிகர்கள் உள்ளனர்” என்று பேசி இருந்தார்.

-விளம்பரம்-

actor dhanush

இதில் வேடிக்கை என்னவென்றால் நடிகர் தனுஷ் கூறிய இதே வசனத்தை தான் 2014 ஆம் ஆண்டு இதே மேடையில் இந்த விருதை பெற்ற நடிகர் விஜயும் கூறியுள்ளார். அன்று அவர் கூறியிருந்தது ‘எனக்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் மீது எப்போதும் ஆசையில்லை, என்னை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறாரக்ள். என்னை விட நடிகர் சூர்யா அழகாக இருக்கிறார்’ என்று பேசியிருந்தார். இதனால் 4 வருடங்களுக்கு முன்னர் விஜய் பேசிய அதே வசனத்தை தனுஷ் காபி அடித்து பேசியுள்ளார்.

Advertisement