குடி போதையில் செல்பி ! ரசிகர்களால் நடு இரவில் தாக்கப்பட்ட நடிகர் ! நொறுக்கப்பட்ட கார் !

0
2460

பொதுவாக நடிகர்கள் ஒரு சகா மனிதன் போல வாழ இயலாது. அதுவும் பிரபல நடிகர் என்றால் இன்னும் அதிகம் தான். பிரைவசி சிறிதும் கூட இருக்காது. எங்கு சென்றாலும் ரசிகர்கள் மொய்த்து விடுவார்கள். அப்படி சில நேரங்களில் ரசிகர்கள் அத்து மீறளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அப்படித்தான் பிரபல கன்னட நடிகர் தீக்சித் ஷெட்டியிடம் ரசிகர்கள் அத்து மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு இடத்திக் சில வேலைகளை முடித்துவிட்டு தனது காரில் ஏற சென்றுள்ளார் தீக்சித் ஷெட்டி.

அவர் அந்த இடத்திற்கு வந்ததை பார்த்த அவரது ரசிகர்கள் அவதை நிறுத்தி செல்பி எடுக்க கேட்டுள்ளனர். ஆனால், போதையில் இருந்த அந்த ரசிகர்களுடன் செல்பி எடுக்க மறுத்து காரில் ஏறி சென்றுவிட்டார் தீக்சித் ஷெட்டி.

இதனால், ஆத்திரம் அடைந்த குடிகாரர்கள் அவரது காரை விரட்டி கற்கல் வீசி தாக்கியுள்ளனர். இதனால் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார் தீக்சித்