முடிய வெட்டு அப்போதா அணியில தேர்வாவ. அட்வைஸ் செய்த சீனியர். தோனி சொன்ன பதில்.

0
11912
dhoni-akash-chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் வெற்றிகரமான ஒரு கேப்டனாக இருந்து வந்தவர் மகேந்திரசிங் தோனி இந்தியாவிற்காக உலக கோப்பை, டி20 ,சாம்பியன்ஸ் டிராபி என்று மூன்று வகையான உலக கோப்பையை பெற்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையுடன் திகழ்ந்து வருகிறார் தோனி. கேப்டனாக மட்டுமில்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருகிறார். தோனி என்று சொன்னதும் நம் நினைவுக்கு முதலில் வருவது அவரது ஹேர் ஸ்டைல் தான்.

-விளம்பரம்-
Dhoni

- Advertisement -

தோனி, இந்திய அணியில் இடம்பிடித்து 2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தான். களமிறங்கிய முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆனார். தோனியால் அந்த தொடரில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஆனால், அதற்கடுத்த பாகிஸ்தான் தொடரில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் கங்குலி. அந்த தொடரின் முதல் போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய தோனி, அதிரடியாக விளையாடி 148 ரன்கள் குவித்தார். அந்த போட்டியே கிரிக்கெட் ரசிகர்களுக்கு தோனியின் மீது பார்வை பட முக்கியமான காரணமாக அமைந்தது.

இதையும் பாருங்க : மூன்று மாதத்தை நிறைவு செய்த மகன். பிறந்து 15 நாளில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்ட சுஜா.

அதன்பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த தோனி தொடர்ந்து பல ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார். பிறகு 2007 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி தோல்வி பெற்றது. அந்த தொடரில் சுமாராக செயல்பட்ட தோனி விமர்சிக்கப்பட்டார். அதன் பின்னர் தோனி டி20 இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதே ஆண்டு டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இளம்வீரர்களை கொண்ட இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அதன் பின்னர் மெல்ல மெல்ல தோனியின் அத்தியாயம் துவங்கியது என்றே கூறலாம்.

-விளம்பரம்-
akash chopra

தனது அதிரடி ஆட்டத்தினால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தோனியின் ஹேர் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அதன் பின்னர் பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் நீளமான முடியை வளர்த்துக்கொண்டு தோனி ஹேர் ஸ்டைல் என்று பெருமையாக கூறி வந்தார்கள். இப்படி தோனியின் ஹேர்ஸ்டைல் பிரபலமாக இருந்து வந்த நிலையில் கிரிக்கெட்டில் தோனியின் சீனியர் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா, தோனியின் ஹேர் ஸ்டைல் குறித்து பேசிய விஷயம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணி வீரர்களை தேர்வு செய்து கொண்டிருந்த போது தோனி முதன்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகி இருந்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்பாக இந்திய அணியின் சீனியரான ஆகாஷ், சோப்ரா தோனியிடம் ‘நீ உனது முடியை வெட்டிக் கொள்ளவில்லை என்றால் உனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறியிருக்கிறார். அதற்கு தோனியோ, யாருக்கு தெரியும்? நான் இந்திய அணியில் தேர்வாகி, பின்னர் எனது ஹேர்ஸ்டைலை ரசிகர்கள் பின்பற்றுவார்கள்’ என்று மிகவும் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

Image result for dhoni long hair"

ஆனால், தோனி கூறியது போலவே அவர் இந்திய அணியில் தேர்வாகி ஒரு சிறப்பான வீரராக திகழ்ந்து வந்தார். அதே போல ரசிகர்கள் மத்தியில் தோனி எந்த அளவிற்கு பிரபலமானாரோ அதே அளவிற்கு அவரது ஹேர்ஸ்டைல் பிரபலமானது. தொடர்ந்து அதே நீளமான ஹேர் ஸ்டைலில் விளையாடி வந்த தோனி, கடந்த2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை தொடரில் இந்திய அணி வென்றபின்னர் தோனி தனது நீளமான முடியை வெட்டிக்கொண்டார் தோனி.

Advertisement