ஹீரோ சம்பளம் போக மிச்ச காஸ்ல படம் எடுத்தா இப்படிதான் – ப்ளூ சட்டை மாறனின் மாவீரன் விமர்சனம்.

0
2564
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

மாவீரன் கதை :

ஆனால், உண்மையில் ஒரு சில சமயத்தில் நல்ல படங்களுக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். பிரின்ஸ் படத்தின் படு தோல்வியை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார்.

படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது.

-விளம்பரம்-

மாவீரன் விமர்சனம் :

பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

திரைக்கதை எதுவும் இல்லை

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் பெற்று வரும் நிலையில் இந்த படத்தை விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘இந்த படத்தின் கதையை எடுத்துக் கொண்டால் அதே பழைய ஹீரோ வில்லன் கதைதான். படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது செகண்ட் ஆஃப் கவுத்துவிட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் ஹீரோவுக்கு கேட்கும் குரலை வைத்து முதல் பாதையில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டார்கள் ஆனால் இரண்டாம் பாதையை தாண்டும் அளவிற்கு திரைக்கதை எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement