ரசிகர்ளுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் போட்டு கையை கழுவினாரா அஜித் ? எழுந்த புதிய சர்ச்சை.

0
2789
Ajith
- Advertisement -

ரசிகர்களுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டாலில் அஜித் கை கைகழுவினார் என்று எழுந்த சர்ச்சைக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

-விளம்பரம்-

அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

துணிவு படம்:

மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி ஏகே இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது.

ஏகே 62 படம்:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. அஜித்தின் திரைப்பட வரிசையில் V என்ற வார்த்தை துவங்கும் டைட்டிலில் இது 10வது முறை. அதுமட்டுமில்லாமல் இந்த போஸ்டரில் விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

விடாமுயற்சி குறித்த தகவல்:

அதேபோல் அஜித் அவர்கள் தன்னுடைய படத்திற்காக எந்த ஒரு ப்ரோமோசனுமே செய்ய மாட்டார். இது குறித்து கூட சமீபத்தில் நல்ல படத்திற்கு ப்ரொமோஷன் தேவை இல்லை என்று அஜித்தின் மேனேஜர் கூறியிருந்தார். இதனால் விடாமுயற்சி படத்திற்கும் எந்த ஒரு ப்ரோமோசன் அஜித் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. அதோடு துணிவு படம் முடிந்த உடனே அஜித் அவர்கள் பைக் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். சுற்றுப்பயணம் முடிந்தவுடன் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் கமெண்ட்:

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் தன் குழந்தைகளுடன் சைக்கிளில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் கைக்கொடுத்து போட்டோ எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படம் தான்
வெளியாகி இருக்கிறது. அதில் அஜித் அவர்கள் ரசிகர்களுக்கு கை கொடுத்து விட்டு டெட்டாலில் கை கழுவி இருக்கிறார்.என்று அஜித்தை விமர்சித்து இருக்கிறார்கள். இதை பார்த்த அஜித் ரசிகர்கள், அது பேப்பர் போட் என்கிற ஜூஸ். ஜூஸில் கை கழுவி டெட்டால் குடிப்பார்களா? உங்க அறிவில் தீயை வைக்க. எதையும் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவதா என்றெல்லாம் ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

Advertisement