இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் காரணம் என்ற புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இசையமையாளர் இமான் சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால், சமீப காலமாக சிவகார்திகேயன் படங்களுக்கு இமான் இசையமைப்பதை நிறுத்திவிட்டார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இமானிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட போது ‘ மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அந்த படத்தில் எல்லா பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம்.காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் நான் இசையமைப்பாளராக, அவர் நடிகராக இருந்தால் பார்க்கலாம்.
துரோகம் என்பது நமக்கு தெரியாமல் தான் நடக்கும். அவர் செய்த துரோகத்தை நான் தாமதமாக தான் புரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் அவர் என்னிடம் நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தார். அவரை நானும் நம்பினேன். அதற்கு பிறகு தான் அவர் எனக்கு செய்த துரோகம் தெரிய வந்தது. இதை நான் வேறொருவர் மூலமாக தெரிந்து கொள்ளவில்லை. நானே அனுபவித்து உணர்ந்தேன்.இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும்.
அதற்கு காரணம், குழந்தைகளின் எதிர்காலம் தான். இந்த ஊர் என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என்னை தவறானவன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. நான் யார் என்று எனக்கு தெரியும். என்னை படைத்தவனுக்கும் என்னை தெரியும். நான் செய்யும் தொழிலுக்கும், என்னை சேர்ந்தவர்களுக்கும், என்னுடைய குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நான் சரியாக இருக்கிறேனா என்பதில் மட்டும் தான் நான் பார்ப்பேன். அதேபோல் சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்திற்கு அவர் மட்டுமே காரணம் கிடையாது. அதில் அவர் ஒரு முக்கியமான ஆள் தான். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதிலும் இமான், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று தான் சிவகார்திகேயன் சொன்னதை நான் சொல்லவில்லை என்று கூறியதை குறிப்பிட்டு இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயன் பெயரை இழுத்து வருகின்றனர். இசையமைப்பாளர் இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்ன இவர்களுக்கு Veronica மற்றும் Blessica என்ற இரு மகள்களும் பிறந்தனர். இப்படி ஒரு நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கடந்த 2021 ஆம் ஆண்டு 29 ஆம் தேதி அறிவித்து இருந்தார். நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதே போல இமான் இறுதியாக சிவர்கார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பின் தான் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைப்பதை நிறுத்திவிட்டார். நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. மேலும், இமான் தனது மனைவியை 2020 ஆம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறியவித்து இருந்தார். இதையெல்லாம் வைத்து தான் இமான் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்பது போல பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் குறித்து சில யூடுயூபர்கள் அன்றே பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.