பேட்ட படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.! என்ன சொன்னார் தெரியுமா.!

0
567

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பேற்று தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலங்கானா, வெளிநாடுகளிலும் படம் வெற்றிநடைபோட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் படம் முதல் நாளில் 1.12 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேட்ட படம் அமெரிக்க பாஸ் ஆபீஸில் முதல்நாளில் 5 கோடியே 28 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் முதல்நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் பேட்ட மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

முதல் இரண்டு இடங்களில் முறையே கபாலி மற்றும் 2.0 ஆகிய படங்கள் உள்ள நிலையில் அமெரிக்காவில் ரஜினியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பேட்ட படத்தை பார்த்து படம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டதில், இது மாதிரியான ரஜினி படங்களை பார்த்து வெகு நாட்களாகி விட்டது. உங்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பே போதும் படத்தின் வெற்றியை கூற. முழுக்க முழுக்க ரஜினிக்கான படத்தை கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. அனிரூத்தின் பின்னணி இசை அற்புதம். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement