என்னது இந்த சூப்பர் ஹிட் பாடல்களை எல்லாம் எழுதியது செல்வராகவானா? இது தெரியுமா உங்களுக்கு

0
161
- Advertisement -

தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி  கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின்  முக்கியமான இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார். தமிழில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இன்று வரை பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதிலும் இறுதியாக இவரது இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
Selvaraghavan

அதிலும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. செல்வராகவன் இயக்கிய படங்களிலேயே மிகவும் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் வெளியான போது ஒரு சில விமர்சனங்களை எதிர்கொண்டது .

- Advertisement -

ஆயிரத்தில் ஒருவன் படம் :

தற்போது இந்த படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. க்ராபிக்ஸ் தொழில் நுட்பம் தமிழ் சினிமாவில் சரியாக பயன்படத்தப்படாமல் இருந்த காலகட்டத்தில் செல்வராகவன் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை அருமையாக கையாண்டிருப்பார். அதுபோக சோழர் பரம்பரையின் வரலாற்றை விவரிக்கும் காட்சி மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த படம் வெளியான போது இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான 300, கிளாடியேட்டர் போன்ற படங்களின் தழுவல் தான் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. செல்வராகவனை ஒரு இயக்குனராக தான் பலருக்கும் தெரியும் ஆனால், அவர் பல பாடல்களை எழுதி இருக்கிறார் என்பது பலர் அறிந்திராதா விஷயம். அவர் எழுதிய பாடல்களின் லிஸ்ட் இதோ.

-விளம்பரம்-

செல்வராகவன் எழுதிய பாடல்கள் :

  • துள்ளுவதோ இளமை – கண்முன்னே எத்தனை நிலவு
  • ஆயிரத்தில் ஒருவன் – உன் மேல ஆசைதான்
  • குட்டி – நீ காதலிக்கும் பொண்ணு
  • மயக்கம் என்ன – நான் சொன்னதும் மழை வந்துச்சா
  • பா பாண்டி – பார்த்தேன் களவு போன
  • நெஞ்சம் மறப்பதில்லை – அனைத்து பாடலும்

இயக்கம் To நடிப்பு :

தொடர்ந்து படங்களை இயக்கி வந்த செல்வராகவன் சாணிக்காகிதம் படத்தின் மூலம் நடிகரககவும் களமிறங்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் இயக்கத்தில் ‘பகாசூரன்’ படத்தில் செல்வராகவன் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.

Advertisement