ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற கூறப்பட்டு வருகிறது சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த “பிங்க்” படத்தை தான் ரீ-மேக் செய்யயுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.எனவே, மீண்டும் ரீ-மேக் கதையில் அஜித் நடிக்கிறாரா என்று ரசிகர்கள் அப்சட் அடைந்தனர். ஆனால், சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் வினோத், தல 59 படம் 'பிங்க்' படத்தின் ரீமேக் இல்லை என்பதை உறுதிசெய்துள்ளார். எனவே, தல59 திரைப்படம் ஒரு புதிய கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்.#Thala59 It's Not a Pink remake.
— H.Vinoth (@Vinoth_director) November 14, 2018





