“திமுகவிற்கு அந்த மாநாட்டை நடத்த எந்த ஒரு தகுதியும் இல்லை” பாதயாத்திரையில் அண்ணாமலையின் அதிரடி பேச்சு.

0
1096
- Advertisement -

திமுக மீனவர்களுக்கு அளித்த வாக்குறிதியை நிறைவேற்ற வில்லை என்றும் மீனவர் மாநாட்டை நடத்த திமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையில் குற்றம்சாட்டியுள்ளார். ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் நேற்று தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா. பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி .வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்கள்  வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

மீனவர்களை பற்றி பேசிய அண்ணாமலை:

திமுக சார்பில் இந்த மாதம் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மாநாட்டை நடத்த உள்ளது. மீனவர்களுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத இந்த திமுக அரசு எப்படி இந்த மாநாட்டை நடத்த முடியும்? கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை இலங்கை கடற்படையால் 81 தமிழக மீனவர்களை சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை பிரதமர் மோடி முழுவதுமாக நிறுத்தியுள்ளார். திமுக வாக்குறுதியில் கூறியது போல மீனவர்களுக்கு வீடு கட்டி தரப்படவில்லை மேலும் மீன் பிடி தடைகாலத்தில் 8ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.

-விளம்பரம்-

புதிய மீன்வளக் கல்லூரி எனப் பல்வேறு திட்டங்களை அறிவித்தது ஆனால் இது வரை எதையும் செய்ய வில்லை என்றும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக ரூபாய் 620 கோடியில் பணிகள் முடிவடைந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தடுக்கவே கனிமொழி எம்.பி அவர்கள் செயல்பட்டு வருகிறார். திமுக மீது உள்ள கோவத்தை அவர் மத்திய அரசு மீது காட்டுகிறார்.               

Advertisement