ஏன் இப்படி நடக்கிறது? என்ன ஆனது? என்று யோசிக்க முடியாத அளவிற்கு பலருமே மோசமாக பேசுகிறார்கள் – ஓட்டுநர் ஷர்மிளா உருக்கம்.

0
2357
Sharmila
- Advertisement -

சோசியல் மீடியாவினால் நான் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன் என்று கோவை ஓட்டுநர் ஷர்மிளா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே கோவை ஓட்டுனர் ஷர்மிளா தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டு இருந்தார். இவர் கோவை தனியார் பேருந்தில் முதல் பெண் டிரைவராக புகழ் பெற்றவர். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுபவர். இவர் தன்னுடைய தந்தையிடம் தான் ஓட்டுநர் தொழிலை கற்றுக் கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், தன்னுடைய தந்தை ஆசையை நிறைவேற்றுவதற்காக இவர் கனரக வாகனங்களை ஓட்ட பழகினார். பின் போராடி தனியார் பேருந்தில் டிரைவர் ஆனார். கொஞ்ச நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். ஷர்மிளாவின் இந்த முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

- Advertisement -

பெண் ஓட்டுனர் ஷர்மிளா குறித்த தகவல்:

அந்த வகையில் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி அவர்கள் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணித்திருந்தார். அப்போது அவர் சர்மிளாவை பேருந்தில் அணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். அதன் பின் தான் கண்ரக்டருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெண் கண்டக்டர் ஒரு மாதிரியாக பேசுகிறார் நான் ரிலீவ் ஆகிக்கொள்கிறேன் என்று சர்மிளா கூறியிருக்கிறார்.

ஷர்மிளா விவகாரம்:

இதை அடுத்து பேருந்து மேனேஜருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பின் தன்மானம் தான் முக்கியம் என்று ஷர்மிளா வேலையை விட்டு வெளியேறினார். இது தொடர்பாக ஷர்மிளா பேட்டியும் அளித்து இருந்தார். இதை அடுத்து பலரும் ஷர்மிளாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஷர்மிளா வேலையை விட்டு நின்ற விவகாரம் தான் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருந்தது. மேலும், பேட்டியில் ஷர்மிளா அவர்கள் பேருந்து ஓட்டவில்லை என்றால் நான் ஆட்டோ, கார் வாங்கி ஓட்டி பிழைத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ஷர்மிளா அளித்த பேட்டி:

இதை அடுத்து நடிகர் கமலஹாசன் அவர்கள் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். இருந்தாலும், ஷர்மிளாவை குறித்து சிலர் சோசியல் மீடியாவில் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் ஓட்டுநர் ஷர்மிளா பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், முன்பு எப்படி இருந்தனோ அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு நிறைய பாசிட்டிவான கமெண்ட்ஸ்கள் வந்தது. பலரும் ஆதரவாக இருந்தார்கள். பின் நாட்கள் செல்லச் செல்ல அப்படியே எதிர்மறையான விமர்சனங்கள் வருகிறது. நான் இந்த தொழிலை ஆசைப்பட்டு விருப்பப்பட்டு செய்கிறேன். ஆனால், அதையே தவறாக பேசுகிறார்கள்.

சோசியல் மீடியா குறித்து சொன்னது:

அதே போல் கமல் சார் வாகனம் வாங்கிக் கொடுத்தது, வேலையை விட்டு நின்றது என்று எல்லா விஷயத்திற்கும் ஆதரவு கொடுத்தவர்களே தற்போது தப்பாக பேசுகிறார்கள். இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? என்ன ஆனது? என்று யோசிக்க முடியாத அளவிற்கு பலருமே மோசமாக பேசுகிறார்கள். இது ரொம்ப கவலையாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நான் என் மனதிற்கு தோன்றியது தான் பேசினேன். ஆரம்பத்தில் ஆதரித்த அவர்கள் தற்போது நான் எது பேசினாலும் தவறாக பார்க்கிறார்கள். அதனால் நான் ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து யோசித்து பேசுகிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன் என்று மன வேதனையில் ஷர்மிளா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement