நடன மாஸ்டர் பிருந்தா அவர்கள் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ஹே சினாமிகா. இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகக்குறைவு. கடந்த சில வருடங்களாகத்தான் பெண் உதவி இயக்குநர்கள் பல படங்களில் பணியாற்றி வருகிறார்கள். எதிர்காலங்களில் நிறைய பெண் இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வர வாய்ப்புகள் அதிகம். அதிலும் பல வருடங்களாக நடன இயக்குனராக பிரபலமாக இருக்கும் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். படத்தில் வாயை வாயை மூடிப் பேசவும் படத்தில் கதாநாயகனாக நடித்த துல்கர் சல்மான் இந்த படத்தில் வாயை மூடாமல் எப்போதும் பேசும் ஆர்ஜே கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
படத்தின் கதை:
படத்தில் சைக்காலஜிஸ்ட் மலர்விழியாக காஜல் நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் துல்கரும், அதிதியும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு அதிதி சில காரணங்களால் துல்கரை பிடிக்காமல் போகிறது. அவரிடமிருந்து விவாகரத்து வாங்க காஜல் அகர்வாலை நாடுகிறார். இறுதியில் இருவரும் பிரிந்தார்களா? அல்லது சேர்ந்தார்களா? இவர்கள் இருவருக்கும் பிடிக்காமல் இருக்க காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை. மேலும், படத்தில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லை,
படத்தின் நடிகர்கள்:
பஞ்ச் டயலாக் இல்லை என்றாலும் கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு துல்கர் சல்மானுக்கு பாராட்டுகள். அதோடு சில இடங்களில் தன்னையே தாழ்த்தி நடிக்கக்கூடிய கதைகள் வந்திருந்தாலும் தயங்காமல் துல்கர் நடித்துள்ளார். மேலும், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் இருவரும் துல்கருக்கு இணையாக கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். அதிலும் ஏமோஷன் காட்சிகளில் மூவருமே சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள். படத்தில் வரும் சில காமெடி காட்சிகள் ரசிக்க வைத்திருக்கிறது.
படத்தின் இசை:
மேலும், கோவிந்தாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. முதல் படத்திலேயே கதையை சிறப்பாகக் கையாண்டிருந்தார் இயக்குனர். கொஞ்சம் மிஸ் பண்ணினாலும் கதையே தப்பாக இருக்கும் நிலையில் கதையை கையாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இன்றைய இளம் தலைமுறையின் பெரும்பாலான பெண்களின் குணத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகளில் யோகி பாபு வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் அலசல்:
ஆர்ஜே விஜய் மற்றும் நட்சத்திரா தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கின்றனர். படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு இல்லாமல் படம் முழுவதும் துல்கர், அதிதி, காஜல் சுற்றியே திரைக்கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இயக்குனர் பிருந்தா விடம் மணிரத்னத்தின் பாதிப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்லலாம். மௌன ராகம், அலைபாயுதே, ஓ காதல் கண்மணி படங்களின் சாயல் ஆங்காங்கே வந்து செல்கிறது. இடைவேளை வரை சுவாரசியமாக நகரும் படம் இடைவேளைக்கு பிறகு பொறுமையை சோதிக்கிறது. பின் கிளைமாக்ஸில் வந்து சில பல நியாயம் சொல்லி கதையை முடிக்கிறார்கள்.
பிளஸ்:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
பிருந்தா அறிமுக இயக்குனராக இருந்தாலும் இந்த கதையை கொண்டு சென்ற விதம் அருமையாக இருக்கிறது.
அழகான காதல் கதையை சொல்லி இருக்கிறார்.
மைனஸ்:
முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி ரசிகர்களின் பொறுமையை சோதித்து இருக்கிறது.
படம் முழுவதும் துல்கர், அதிதி,காஜல் ஆகியோரை சுற்றி நகர்வதால் சலிப்புத் தட்டுகிறது.
காமெடி காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதிரடி ஆக்ஷன் எதுவுமே இல்லாமல் பொறுமையாக கதை செல்கிறது.
இறுதி அலசல்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு துல்கரின் படம் வெளியாகி இருக்கிறது. படம் சுமாராக இருக்கிறது.
மொத்தத்தில் ஹே சினாமிகா – ஓகே சினாமிகா தான்.