திரௌபதி ஷீலா நாயகியாக நடித்துள்ள ‘நூட்லஸ்’ எப்படி இருக்கிறது ? – முழு விமர்சனம் இதோ.

0
1910
Noodles
- Advertisement -

இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நூடுல்ஸ். இந்த படத்தை ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், மதன், உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராபர்ட் சற்குணம் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹரிஷ் உத்தமன், சீலா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஆலியா என்ற ஒரு மகள் இருக்கிறாள். இவர்கள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். ஹரிஷ் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கிறார். சந்தோஷமாக தன்னுடைய குடும்பத்துடன் ஹரிஷ் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் அந்த வீட்டில் குடியிருக்கும் அனைவரும் மொட்டை மாடியில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டர் மதன் உடன் ஹரிஷ் சண்டை போடுகிறார். பின் எதிர்பாராத விதமாக ஹரிஷ் வீட்டிற்குள் ஒரு கொலை நடக்கிறது. அதுவும் அவருடைய மனைவியின் கையால் நடக்கிறது. இது யார் செய்தது என்று தெரியாமல் இருவரும் பயத்தில் இருக்கிறார்கள்? பின் அந்த குடும்பம் சடலத்தை ஒரு அறையில் மறைத்து வைக்கிறார்கள். இதனை அடுத்து ஏற்கனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் உடன் ஹரிஷ் சண்டை போட்டு இருக்கிறார்.

இதனால் இவர் அந்த குடும்பத்திற்கு தொல்லை தர வருகிறார். இன்னொரு பக்கம் காதல் திருமணம் செய்து ஓடி சென்ற தன் மகளை பார்க்க ஷீலாவின் பெற்றோர்கள் வருகிறார்கள். இறுதியில் ஹீரோ ஹரிஷ் அந்த கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா? இன்ஸ்பெக்டரின் தொல்லையிலிருந்து தப்பித்தாரா? யார் அந்த மர்ம நபரை கொலை செய்தது? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஹீரோ ஹரிஷ் உத்தமன், சீலாவும் தங்களது கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஆனால், திகில் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் காண்பிக்கும் சில காட்சிகள் தான் கடுப்பை ஏற்றி இருக்கிறது. வில்லனாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தன்னுடைய வழக்கமான நடிப்பை தான் இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார். பெரிதாக எந்த ஒரு மெனக்கடலும் செய்யவில்லை. படத்தில் ஆங்காங்கே சில காட்சிகளில் மட்டும் தான் காமெடி வருகிறது. அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கேமரா போன்ற தொழில்நுட்ப காரணிகளும் படத்திற்கு பெரிதாக செட் ஆகவில்லை. சொல்லப்போனால், இது ஒரு குறும்படம் தான். இதை இரண்டு மணி நேரம் இழுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். பின்னணி இசை படத்திற்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்திருக்கிறது. ஒரு சிறிய கதையை இப்படி நீளமாக திரையரங்கில் படமாக காண்பித்திருப்பது தேவையில்லாத ஒன்று. நிறைய நீண்ட காட்சிகள், லாஜிக் குறைபாடுகள், கதைக்கு தேவையானதை விட்டு தேவையில்லாத எல்லாம் இயக்குனர் நேரத்தை கடக்க வேண்டும் என்று காண்பித்து இருக்கிறார். மொத்தத்தில் ஒரு நீண்ட குறும்படத்தை பார்த்த உணர்வு தான் தருகிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசை ஓகே

திகில் காட்சிகள்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை

குறை:

இயக்குனர் கதைகளத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

சுவாரசியம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஒளிப்பதிவு சரியில்லை

நிறைய நீளமான காட்சிகள்

காமெடி ஒரு அவுட் ஆகவில்லை

மொத்தத்தில் நூடுல்ஸ்-சுவை இல்லை

Advertisement