அலறவிட்ட விஜய் ரசிகர்கள் டுவீட்டை டெலீட் செய்த சேனல்…

0
4254
Vijay

இயக்குஞர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘மெர்சல்’. இது விஜய்யின் 61 -வது படம். தற்போது இப்படம் முடிவடைந்த நிலையில் விஜய் நேற்று அரியலூர் அனிதாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியதை எந்தவித பேதமும் இன்றி பலர் பாராட்டு தெரிவித்தனர்.
vijay

விஜய்யை பிடிக்காதவர்கள் சிலர் கூட விஜய்யின் இந்த மனித நேயத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

ஆனால் என்ன செய்தாலும் குறையை கண்டுபிடிக்கும் ஒருசிலர் விஜய்யை குற்றம் கூறி வந்தனர். அவர் விளம்பரத்திற்காக இதுபோன்ற செய்கையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தினர்.

இந்த நிலையில் பிரபல டிவி சேனல் ஒன்று டுவிட்டரில் விஜய்யால் ஒரு மாணவி படிப்பை இழந்து தற்போது ஆடு மேய்த்து கொண்டிருப்பதாக டுவீட் செய்திருந்தது.

இதற்கு மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அந்த மாணவியின் பெயர் மற்றும் தகவல்களை அளித்தால் நாங்களே அந்த பெண்ணின் படிப்பு செலவை ஏற்று படிக்க வைக்கின்றோம் என்று ஆக்கபூர்வமாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அனிதாவின் தந்தையிடம் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தை !

விஜய் ரசிகர்களால் ஏற்பட்ட பயங்கர எதிர்ப்பு காரணமாக பிரபல டிவி அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டது.