அனிதாவின் தந்தையிடம் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தை !

0
3409
vijay-anitha

நீட் தேர்வை எதிர்த்து போராடி இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. 1176 மதிப்பெண்கள் மற்றும் 196.5 கட்ஆப் பெற்ற ஒரு மாணவிக்கு தான் விரும்பிய மருத்துவ படிப்பை படிக்க இடமில்லை என்பது மறுக்கப்பட்ட சமூக நீதியாக பார்க்கப்படுகிறது.

vijay

இந்த நிலையில் அனிதாவின் மரணத்தை கையிலெடுத்து கிருஷ்ணசாமி போன்ற ஒருசிலர் அரசியல் செய்து வருவது அவரது மரணத்தை விட கொடுமையான ஒன்று. அனிதா வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவிப்பதால் அரசியல் லாபம் பெறலாம் என்கிற அரசியல்வாதிகள் மத்தியில் எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி மனிதாபிமான நோக்கத்திற்காக மட்டுமே அவரது வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தவர் இளையதளபதி விஜய்.

Actor Vijay

அனிதாவின் தந்தை மற்றும் அண்ணனை நேரில் ஆறுதல் கூறியதோடு மட்டுமின்றி “எந்த நேரத்திலும் தன்னை அணுகி எந்தவித உதவியையும் கேட்கலாம்”என்று அனிதா குடும்பத்தினர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

அவரது அந்த ஒருவார்த்தை அனிதா குடும்பத்தினரை ஓரளவிற்கு ஆறுதல் படுத்தியிருக்கும் என்று நாமும் நம்பலாம்.