ஜவான் படம் குறித்து ரசிகர்கள் கூறி வரும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் அட்லியும் ஒருவர். இவர் ராஜா ராணி படத்தின் முலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த மூன்று படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
Kaththi (2014) | #Jawan (2023) pic.twitter.com/1h5arkEQqw
— PsyCh ❗ (@Psych_here_) September 8, 2023
தற்போது அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ஆரம்பத்தில் இந்திய எல்லையில் தான் கதை துவங்குகிறது. உயிர் போகும் நிலையில் கிடக்கும் ஷாருக்கானை மக்கள் காப்பாற்றுகிறார்கள்.
ஜவான் படம்:
அவர் எப்படியோ பிழைத்து விடுகிறார். அவர் ஏன் வந்தார்? அவர் யார்? என்ற பிளாஷ்பேக்கை 30 ஆண்டுகளுக்கு பிறகு என்று கதை தொடங்குகிறது. அதில் ஷாருக்கான் உடன் சேர்ந்து பெண்கள் பலர் அரசுக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் இந்தியன் தாதாக்களாக இருக்கிறார்கள். இவர்களை எதிர்க்கும் வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க நயன்தாரா முயற்சிக்கும் போது தான் நயன்-ஷாருக்கானுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், அந்த குற்றவாளி தான் ஷாருக்கான்.
படத்தின் கதை:
திருமணம் நடந்த அன்று தான் ஷாருக்கான் உண்மையை சொல்ல வருகிறார். அதற்குள் உண்மை அறிந்த நயன்தாரா அவரை கைது செய்கிறார். பின் வில்லன் விஜய் சேதுபதி திட்டமிட்டபடி நயன்தாரா-ஷாருக்கானை தாக்குகிறார். அப்போது ஷாருக்கானை காப்பாற்ற இன்னொரு சாருக்கான் வருகிறார். இறுதியில் இந்த இரண்டு ஷாருக்கான் யார்? என்ன சம்பந்தம்? விஜய் சேதுபதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் என்ன தவறு செய்தார்? ஏன் அவர் குற்றவாளி? என்பது தான் படத்தின் மீதி கதை.
ரசிகர்கள் கருத்து:
மேலும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பலரும் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து கூறி வருகிறார்கள். அதிலும் இந்த படத்தை பிகில், மெர்சல், தெறி, சர்தார், துணிவு, ஆரம்பம், மங்காத்தா, கத்தி, சிவாஜி,, ராஜா ராணி, துப்பாக்கி என எல்லா படங்களின் கலவை தான் ஜவான் என்று விமர்சித்து வருகிறார்கள். அதிலும் சிலர், இந்த படத்தினுடைய கதை அப்படியே அஜித் நடித்த ஆரம்பம் படம் மாதிரியே இருக்கிறது.
நெட்டிசன்கள் விமர்சனம்:
அட்லி அஜித்தை வைத்து படம் பண்ணுவார் என்று சொன்னார். ஆனால், அவருடைய படத்தையே எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே அட்லீ என்றால் காப்பி என்ற சர்ச்சை சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜவான் படம் படுதோல்வி அடைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் அட்லீயை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் அட்லியின் ஜவான் படம் குறித்த மீம்ஸ்கள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.