பொங்கல் ரேஸில் வென்றதா ‘கேப்டன் மில்லர்’ – முழு விமர்சனம் இதோ.

0
442
- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார், சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்திப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

இந்த படம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்தது. படத்தில் மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றார்கள். இவர்கள் கட்டிய கோயிலுக்குள் இவர்களே போக முடியாமல் இருக்கும் மன்னர் ஆட்சியில் அடிமைகளாக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஆத்திரம் அடைந்த தனுஷ் மரியாதை வேண்டும் என்று பட்டாளத்தில் ஆங்கில படையில் சேர்ந்தார். ஆனால், அங்கு ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி தனுஷிற்கு கிடைக்கிறது.

- Advertisement -

இதனால் குற்ற உணர்ச்சியில் தனுஷ் சொந்த ஊர் திரும்புகிறார். ஆனால், அந்த கிராமத்து மக்கள் தனுசை ஊரை விட்டு துரத்துகிறார்கள். இதனால் காட்டில் நாடோடி வாழ்க்கையாக தனுஷ் வாழ்கிறார். இவரை புரட்சி கூட்டம் அரவணைத்து ஏற்றுக் கொள்கிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்த புரட்சி கூட்டம் சண்டை போடுகிறது. இதில் தனுஷும் இருக்கிறார். இன்னொரு பக்கம் மன்னராட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது.

இதை பொறுக்காத மன்னர் குடும்பத்தினர் திருட வேண்டும் என்று புரட்சி கூட்டத்திடம் வேண்டுகோள்
வைக்கிறது. இதனால் தனுஷ் உடைய கூட்டம் திருட செல்கிறது. போன இடத்தில் தனுஷ் எடுக்கும் சுயநல முடிவு ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கிறது. இதனால் ஆங்கிலேயர்- மன்னர் பகைக்கு இடையே மத்தளம் பாறை மக்கள் திண்டாடுகிறார்கள். யாரால் வெறுத்து ஊரைவிட்டு விரட்டப்பட்டாரோ, அந்த மக்களை காக்கவே தனுஷ் கேப்டன் மில்லனாக மாறுகிறார். அவர் என்ன செய்தார்? மக்களை எப்படி காப்பாற்றினார்? ஆங்கிலேயரை வெளியேற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

படம் முழுக்க சுதந்திரத்துக்கு முன்னால் நடக்கும் கதையை காண்பிக்கிறார்கள். ஐந்து அத்தியாயங்களை கொண்ட பகுதியாக கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஈசனாக இருக்கும் தனுஷ் எப்படி கேப்டன் மில்லராக மாறுகிறார் என்பது படத்தின் கதை. உடல் மொழி, உணர்வுகள், ஆக்ஷன், சண்டை என அனைத்திலும் தனுஷ் பூந்து விளையாடிருக்கிறார். மேலும், படம் முழுக்க தனுஷ் தான் நிறைந்து இருக்கிறார் என்று சொல்லலாம்.

இவர் அடுத்து செங்கோலனாக சிவராஜ்குமார், வேல் மதியாக பிரியங்கா மோகன், தேனாக நிவேதிதா என்று பல பிரபலங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் சமகால அரசியல், ஆக்சன் படைப்பாக கொடுத்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது இவர் எவ்வளவு மெனக்கட்டு இருக்கிறார் என்பதை சொல்ல முடிகிறது. படத்திற்கு பலமே ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தான். குறிப்பாக, இடைவெளிக்காட்சி எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

சமூகத்தில் இருக்கும் தீண்டாமை, பெண் அடிமைத்தனம், சுயநலத்திற்காக பயன்படுத்தப்படும் மக்கள், சமூக நீதிக்காக போராட செல்பவர்கள் உடைய நிலை, மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் போன்ற பல விஷயங்களை இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார். ஒருவருடைய நம்பிக்கை மற்றவர்களை பாதிக்க கூடாது என்பதையும் இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். மேல் ஜாதி, கீழ் ஜாதி, பணக்காரன், ஏழை என்று எந்த நிலையில் இருந்தாலும் பெண் அடிமையாக தான் இருக்க வேண்டும் என்றும், பெண் பேச்சைக் கேட்க வேண்டும் என்றால் அவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும் போன்ற காட்சிகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

சுயநலத்திற்கும் வஞ்சத்திற்கும் இடையே நடக்கும் கலவரம் தான் கேப்டன் மில்லர் படம். முதலில் இருந்து இறுதிவரை துப்பாக்கி, வெடிகுண்டுகள் மிரட்டி இருக்கிறது. ஆனால், கொஞ்சம் இதை குறைத்து இருக்கலாம். சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் இயக்குனர் சிறப்பாக கொடுத்து இருக்கிறார். மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு ஒரு நல்ல விருந்தாக கேப்டன் மில்லர் இருக்கிறது என்று சொல்லலாம்.

நிறை:

தனுஷ் உடைய நடிப்பு சிறப்பு

கதைக்களம் அருமை

ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

இடைவெளிக்குப் பிறகு காட்சி நன்றாக இருக்கிறது

சமூகத்திற்கு தேவையான மெசேஜை இயக்குனர் கொடுத்திருக்கிறார்

குறை:

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வரும் நிறைய துப்பாக்கி வெடிகுண்டு சத்தத்தை குறைத்து இருக்கலாம்

சில லாஜிக் குறைபாடுகள்

பெண் அடிமைத்தனம் மேல் ஜாதி கீழ் ஜாதி போன்ற சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் கேப்டன் மில்லர்- தரமான ஆக்சன்

Advertisement