“உணவு நல்லாவே இல்லை, வேகவே இல்லை” அதிமுக மாநாட்டில் அதிமுக தொண்டர்களை அதிருப்தி.

0
1342
- Advertisement -

மதுரையில் அதிமுகவின் பிரமாண்ட மாநாட்டிற்கு கலந்து கொண்ட  அதிமுக தொண்டர்கள் அங்கு உணவு தரமாக இல்லையென்றும் சரியாக வேக வில்லை என்றும் அதிமுக தொண்டர்கள் குற்றம்சாற்றியுள்ளார். தற்போது மதுரையில் நடைபெற்று வரும் அதிமுகவின் மாநாட்டில் மூன்று வேலையும் அறுசுவை உணவு வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருந்தார். இன்று நடைபெற்று வரும் மாநாட்டின் இந்த மாநாட்டின் மூலம் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்றும் கூறி வந்தனர். அதிமுகவின் மாநாடு காரணமாக திமுக உண்ணாவிரதத்தை மாற்றி அமைத்தது.

-விளம்பரம்-

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்  மாவட்டங்களை மையமாக வைத்து நடத்தப்படும் மாநாட்டின் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் யாருடைய பக்கம் நிற்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும் எனவும் அரசியல் தலைவர்கள் தெறிக்கின்றன. மதுரையில் நடத்தபடும் மாநாட்டிக்காக அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் தொண்டர்கள் தான் பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்ள கொங்கு மண்டலங்களில் அதாவது எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி அதற்க்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி நடத்த உள்ள மாநாட்டிற்கு இன்று நடைபெற்று வரும் மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள் தங்குவதற்கான அறைகள், உணவுகள் ஏற்பாடு செய்ய பட்டது.. தொண்டர்களை வரவைப்பதர்க்கான கார், வேன்,பேருந்துகளை முன்பதிவு செய்து 2 சிறப்பு ரயில்களை இயக்கியும் தற்போது தொண்டர்களுக்கும் 3 வேலையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியை தொலை துரத்தில் இருந்து காணும் வகையில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளது.உணவு குறித்து கூறுகையில் மாநாடு அன்று வரும் தொண்டர்கள் அனைவருக்கும் 3 வேலையும் உணவுகள் வழங்கப்படும் என்றார்.

காலையில் இட்லி, வடை, பொங்கல், உப்புமா, வழங்கப்படும். மதியம் வெஜிடபிள் பிரியாணி, பொரியல், அப்பளம் ,தக்காளி சாதம், தயிர் சாதம், புளிசாதம், காய்கறி கூட்டு, வழங்கப்படும். 300 மி.லி. அளவு கொண்ட 10 லட்சம் குடிநீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மாநாட்டிற்கு வருவோர் நான்கு திசைகளிலும் இருந்து பந்தலுக்கு வர வழி செய்யப்பட்டுள்ளது. அங்கங்கே குடிநீர் சுத்திகரிப்பு பொருத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும் 150 இடங்களில் மொபைல் கழிவறைகளும் ஏற்பாடு செய்யபட்டுளதாக தெரிவித்தார். இந்நிலையில் தொண்டர்கள் கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டர்களின் கருத்து:

இன்று மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் பலரும் உணவு தரமாக இல்லையென்றும் இந்த உணவை யாரச்சும் சாப்பிட முடியுமா? என்றும் கேள்விகளை எழுப்பினர். அதில் ஒரு அரிசி கூட வேக வில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும் உணவுகளை வாங்கி அங்கேயே அதனை போட்டு விட்டு சென்றுள்ளனர். தொலை தூரங்களில் இருந்து வந்த அதிமுக தொண்டர்களுக்கு இது ஏமாற்றத்தையே அளித்தது.        

Advertisement