இதுங்க எல்லாம் ஏன் உயிரோட இருக்காங்கனு புரியவில்லை – பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து தாடி பாலாஜி ஆவேசம்.

0
1645
Thaadibalaji
- Advertisement -

மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் கதவுகளில் மனித மலம் பூசிருக்கும் சம்பவம் குறித்து நடிகர் தாடி பாலாஜி வைத்திருக்கும் கோரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் மத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றியிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பறைகளின் இரும்பு கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் சில பேர் மனித மலத்தை பூசி இருக்கிறார்கள். இது கேட்பதற்கு அறுவெறுப்பு ஊட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் குடிநீர் குழாய் தொட்டியிலும் மனித மலம் கலந்து சேதப்படுத்தி இருக்கின்றனர். பல இடங்களில் மனித கழிவு சிதறி கிடப்பதும், மதுபாட்டில்கள் பரவிக் கிடப்பதுமாக இருக்கிறது. அதோடு பள்ளியில் சரியான சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி சம்பவம்:

இதை கண்டித்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் வகுப்புகளை எல்லாம் புறக்கணித்து தங்களுடைய பெற்றோர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தாடி பாலாஜி வீடியோ:

அதில் அவர், இந்த செய்தியை கேட்கும் போது உடம்பே கூசுது. இதுங்க என்ன ஜென்மம். இதுங்க எல்லாம் ஏன் உயிரோட இருக்காங்கனு புரியவில்லை. நீங்க அந்த பள்ளியில் படிச்சிருக்கலாம். அல்லது உங்க குழந்தை அந்த பள்ளியில் படிக்கலாம். யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், 6 அறிவு உள்ளவர்களா இல்லை 5 அறிவு உள்ள மிருகமா.

-விளம்பரம்-

இதெல்லாம் எவ்வளவு கேவலமான விஷயம். எவ்ளோ பெரிய தப்பு. குழந்தைகளுடைய படிப்பு கெடுது. இன்றைய சூழலில் அரசு பள்ளிகள் சிறந்த பள்ளி என்று நிறைய இடத்தில நானே பேசியிருக்கிறேன். கண்கூடாக பார்த்திருக்கிறேன். முதலில் ஒரே ஒரு விஷயம் நினைச்சிக்கங்க. நம்ம முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு குழந்தை சாதிச்சது என்றால், தான் சாதித்தது போல் அக்குழந்தையை அழைத்து கொண்டு பாராட்ட கூடிய நல்ல மனம் கொண்ட மனிதர் அவர்.

பாலாஜி வைத்த கோரிக்கை:

இந்த சூழலில் இப்படி நீங்கள் பண்ணினால் எவ்ளவு கேவலமா இருக்கு. இது எவ்ளோ பெரிய தவறு. நான் முதல் முறையாக தமிழக முதலமைச்சரை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற குற்றங்கள் நடக்க கூடாது. அதுவும் உங்க ஆட்சியில் நடக்க கூடாது. அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் என்னுடைய சப்போர்ட் எப்போதுமே இருக்கும். விரைவில் அந்த பள்ளிக்கு நேரடியாக வந்து பார்க்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement