விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி அளித்த பணமோசடி வழக்கு – நீதி மன்றம் அதிரடி உத்தரவு

0
704
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பது சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சூரி அவர்கள் தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அது போல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்தி காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். மேலும், தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சூரி அவர்கள் விஷ்ணு விஷாலின் தந்தை மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன் தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால், பேசப்பட்ட சம்பளம் பணத்திற்கு பதிலாக இன்னும் சில கோடிகள் கொடுத்தால் அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

சூரி பணமோசடி வழக்கு:

இதனால் நடிகர் சூரியும் நம்பி பணத்தை கொடுத்து இருக்கிறார். பின் சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் இருவரும் சேர்ந்து சூரியை ஏமாற்றி இருக்கிறார்கள். பிறகு சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு முன்னாள் டிஜிபி ரமேஷுக்கு ஆதரவாக நகர்கிறது என்று சூரி கோர்ட்டில் முறையிட்டு இருக்கிறார்.

மீண்டும் வழக்கை தொடர சூரி அளித்த புகார்:

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் வழக்கு சில காலமாக நடந்து வருவதால் விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அதில் சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது, ரமேஷ் அவர்கள் முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிரான விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

சூரி சார்பாக வழக்கறிஞர் கூறியது:

இதனையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி உயர்ந்த பதவியில் இருப்பவர்கள். அவர்கள் பணமோசடி செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கருத்து மட்டும் தெரிவித்தார்கள். மேலும், கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்று உள்ளது. இதனால் இந்த வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அதோடு இந்த வழக்கை துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும்.

சூரி வழக்கில் நீதிபதி கூறியது:

பின் இதனை கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் என்று சூரி சார்பாக வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதனை விசாரித்த நீதிபதி கூறியது, அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ் மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆறு மாதத்திற்குள் இந்த வழக்கை முடித்து அது தொடர்பான அறிக்கையை கோர்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement