என்னது பிக் பாஸில் மீண்டும் ஜூலியா.! ஷாக்கில் ரசிகர்கள்.! கொஞ்சம் பதறாம படிங்க.!

0
676
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட்டிங்கில் உலகநாயகன் கமலஹாசன் பங்கு பெற்றார் என்ற ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், இந்த போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களை பெயர்களும் அவ்வப்போது அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மூன்றாவது சீஸனில் ஜூலி பங்கு பெறப் போவதாக சில தகவல்களும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Image result for bigg boss 3 tamil

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ்-ன் இரண்டாவது சீசனில்,முதல் சீசனில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினராக அவ்வப்போது வந்து சென்றனர். ஆனால், ஜூலி மட்டும் வரவில்லை. அதற்கு காரணத்தை அவரிடம் கேட்டபோது ‘இப்போதைக்கு தனக்கு கொஞ்சம் நல்ல பெயர் இருந்து வருகிறது. எனவே, அங்கு சென்றால் ஒரு சிலரிடம் தேவையில்லாத பேச்சுக்கள் ஏற்பட்டு மீண்டும் தனக்கு கெட்ட பெயர் வந்து விடுமோ என்ற எண்ணத்தில் சிறப்பு விருந்தினராக செல்லவில்லை’ என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும், பிக் பாஸ் இரண்டாம் சீசன் நடைபெற்றபோது ஜூலி ஒரு சில படங்களில் கமிட்டாகி இருந்தார். அதனால் படப்பிடிப்பில் கொஞ்சம் பிஸியாக இருப்பதினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை என்றும் தெரிவித்திருந்தார் ஜூலி. ஆனால், இந்த சீசனில் இரண்டாவது சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மட்டுமே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த சீசனில் ஜூலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதேபோல இரண்டாவது சீசன் எவ்வளவோ முயன்றும் ரசிகர்களின் அபிப்பிராயத்தை பெறத் தவறியது. எனவே, இந்த சீசனில் எப்படியாவது கொஞ்சம் சர்ச்சையான போட்டியாளர்களை அழைத்து வந்து சநிகழ்ச்சியைு சுவாரசியமாக கொண்டு செல்ல கட்டாயத்தில் உள்ளது பிக்பாஸ் குழு. அதற்கு ஜூலி கண்டிப்பாக ஒரு சிறப்பான தேர்வாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்த சீசனில் ஜூலி பங்குபெறுவது ஓரளவு ஊர்ஜிதமாகி இருப்பதாக சில தகவல்களும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. விரைவில் இதைப் பற்றிய முழு விவரத்தை வெளியிடுகிறோம்.

-விளம்பரம்-

Advertisement