‘கில்லி-2’ எடுத்திருக்க வேண்டியது, விஜயால மிஸ் ஆகிடிச்சி – கில்லி பட நடிகர் சொன்ன உண்மை

0
121
- Advertisement -

கில்லி 2 படம் நின்று போனதற்கு காரணம் இவர் தான் என்று நடிகர் நாகேந்திர பிரசாத் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் நாகேந்திர பிரசாத். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பிரபல நடன இயக்குனரும் ஆவார். இவர் நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன் ஆவார். அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகரும், பிரபல நடன இயக்குனருமான பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரத்தின் தம்பி ஆவார்.

-விளம்பரம்-

மேலும், நாகேந்திர பிரசாத் அவர்கள் பாம்பே படத்தில் இடம்பெற்ற ஹம்மா ஹம்மா என்ற பாடலுக்கு நடனமாடி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் ஜீன்ஸ், நினைவிருக்கும் வரை, தொடர்ந்து மின்னலே போன்ற பல படங்களில் நடித்தும் இருக்கிறார் . இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். இருந்தாலும், இவரால் தன்னுடைய அண்ணன் பிரபுதேவாவை போல் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.

- Advertisement -

நாகேந்திர பிரசாத் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் நாகேந்திர பிரசாத் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கில்லி படம் குறித்து சொன்னது, கில்லி படம் என்றாலே பட்டாசு மாதிரி இன்றும் நினைவிற்கு வரும். விஜய் உடன் சேர்ந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இப்போ மாஸ்டர் படத்தில் நடிக்கும் போது கூட கில்லி 2 படம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் பிளான் பண்ணினார்கள். ஆனால், அதற்குள் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். இதனால் கில்லி 2 எடுக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

கில்லி படம்:

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கு ஒரு இடம் உண்டு. இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருந்தது. அண்ணன்- தங்கை இடையேயான செல்லமான சண்டை, அம்மா சென்டிமென்ட், அதிரடி ஆக்சன், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் இருந்தது.

-விளம்பரம்-

விஜய் திரைப்பயணம்:

இது விஜய் உடைய திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படம் என்று சொல்லலாம். மேலும், கடைசியாக விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதை அடுத்து விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் அரசியல்:

தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இதுதான் இவருடைய கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. காரணம், விஜய் அவர்கள் அரசியலில் களம் இறங்கி இருக்கிறார். இவர் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்திருக்கிறார். வர இருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளிலும் 3ஈடுபட்டு வருகிறார்.

Advertisement