‘மெர்சல்’ படப்பெயரை இனி பயன்படுத்த முடியாது

0
1666
mersal
- Advertisement -

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ” மெர்சல்“. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகில் முதன்முறையாக மெர்சல் படத்தின் பெயருக்கு டிரேட் மார்க் பெற்றுள்ளது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

mersal

இதனால் இனிமேல் ‘மெர்சல்’ என்ற பெயரை வேறு ஏதாவது பொருளுக்கு உபயோகித்தால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ராயல்டி செலுத்தவேண்டி வரும். இதற்கு முன்பு தனுஷ் நடித்த த்ரீ(3) படத்தில் இடம்பெற்ற “ஒய் திஸ் கொலவெறி” பாடலுக்கு டிரேட் மார்க் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தற்போது “மெர்சல்” படத்தின் பெயர்க்கு இப்போது முதன் முதலாக டிரேட் மார்க் பெறப்பட்டுள்ளது.

Advertisement