பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்த தாமரை சம்பாதித்த மொத்த தொகை எவ்ளோ தெரியுமா ? இதுக்கு பெட்டியையே எடுத்துட்டு போய்யிருக்கலாம்.

0
670
thamarai
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் பட்டத்தை தட்டி செல்பவர் யார் என்று தெரிந்து விடும். தற்போது இறுதி கட்டத்திற்கு பிரியங்கா, அமீர், ராஜ், நிரூப், பாவனி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-44.png

இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே பாஸில் வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்து டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. மேலும், வீட்டில் 12 லட்ச ரூபாய் பணம் வைக்கப்பட்டபோது தாமரை எடுத்து வெளியே போய்விடுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், தாமரை பணத்தை எடுக்காமல் கடைசி வரை போராடுவோன் என்று விளையாடினார்.

- Advertisement -

பணப்பெட்டியை மறுத்த தாமரை :

அந்த பணப் பெட்டியை சிபி எடுக்கும் முன்னர் கூட தாமரையிடம் மட்டும் தான் கேட்டார் சிபி. மேலும், இந்த பணம் நிச்சயம் அவருக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறி இருந்தார. ஆனாலும், தாமரை கடைசி வரை பணப்பெட்டியை எடுக்கவே இல்லை. தான் எப்படியாவது இறுதி போட்டிக்கு நுழைந்து விடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தான் இருந்தார் தாமரை. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் தாமரை பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.

கமலுக்கே ஏற்பட்ட ஏமாற்றம் :

தாமரை வெளியேறியது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கமலுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. நீங்கள் வெளியேறுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை, மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று புரியவில்லை என்று கமலே கூறி இருந்தார். சொல்லப்போனால் கடந்த வாரம் நிரூப் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.

-விளம்பரம்-

ரசிகர்களின் ஆதங்கம் :

எனவே, தான் தாமரை வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சொல்லப்போனால் கடந்த வாரம் பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நிரூப்பை விட தாமரை அதிகமான வாக்குகளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தாமரை பணப் பெட்டியுடன் வெளியேறி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்பது ரசிகர்கள் பலரின் ஆதங்கம்.

தாமரை சம்பதித்த பணம் :

சொல்லப்போனால் பணப்பெட்டியில் இருந்த பணத்தை விட தாமரை பிக் பாஸில் சம்பாதித்த பணம் குறைவு தானாம். தாமரைக்கு ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். எனவே, தாமரை பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 98 நாட்கள் இருந்தார் (அதாவது 98÷7 = 14 வாரங்கள்). 14 வாரங்கள் தாக்குபிடித்த தாமரை பிக் பாஸ் மூலம் சம்பாதித்த மொத்த பணம் 14×70,000 = 980,000 மட்டுமே. இதில் 30 % வரியை பிடித்துவிடுவார்களாம்.

Advertisement