“ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் மூலம் ஒரு சதி திட்டத்தை தீட்டி வருகிறார்கள்”- தமிழக முதல்வர் ஸ்டாலின்.    

0
1501
- Advertisement -

ஒரே நாடு ஒரே தேர்தல் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘அவர் அதிபராகவே இருக்க இது போன்ற முயற்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார் .” என்று சென்னையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன் இல்லத் திருமண விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞஇன்று நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது.

-விளம்பரம்-

ஸ்டாலின் கூறியது:

கழகம் தான் குடும்பம் குடும்பம் தான் கழகம் ஆனால் அதே நேரத்தில் கொள்கை குடும்பமாக இருக்கிறோமா என்பது தான் முக்கியம். யாருடைய காலிலும் விழுந்து வளர்ந்த குடும்பம் இல்லை இது. லட்சிய குடும்பமாக ஒரு கொள்கை குடும்பமாக இருக்கிறோம். இது தான் அண்ணா அவர்கள் உருவாக்கிய இயக்கம். இதற்க்கு தான் இயக்கதை உருவாக்கி கொடுத்து இருக்கார்கள். ஆனால் இதுவே சிலருக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது. அதனால் அவர்கள் என்ன என்ன பேசுகிறார்கள் என்பதுக்கு எல்லாம் விமர்சனம் பேச விரும்பவில்லை.

- Advertisement -

அது பற்றி நான் கவலை கூட இல்லை. ஆனால் அதே நேரத்தில் இன்று நாட்டறிக்கு ஏற்பட்டு உள்ள நிலையை நீங்கள் எல்லாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எப்படி சட்டமன்ற தேர்தலின் போது தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு சிறப்பான வெற்றியோடு திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுதிர்களோ அதே போல் இந்த முறை காப்பாற்றி கொடுக்க ஒரு அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் பல முறை சொல்லி இருக்கிறோம் யார் ஆட்சிற்கு வர வேண்டும் என்று இல்லை யார் ஆட்சிக்கு வர கூடாது என்பது தான் நம்மளுடைய லட்சியமாக இருக்க வேண்டும் என்று பல முறை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இந்திய என்பது இந்தியா என்று சொன்னாலே இப்போது பாஜக கட்சிக்கு பயம் வருகிறது. அவர்கள் இந்தியா என்ற பெயரை கூறவே அச்சப் படுகிறார்கள். அதனால தான் இன்று என்ன நிலையை என்றால் இந்தியா கூட்டணி அமைத்து முதன் முதலில் பீகார் கூட்டத்தில் நிதிஷ் குமார் அவர்கள் பாஜக ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளை எல்லாம் ஓன்று திரட்டி பட்னாவில் எப்படி அந்த கூட்டத்தை நடத்தினரோ அதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்தது போல அதற்க்கு பின்னல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மீண்டும் கூடி 2வது முறையாக கூடினோம்.

-விளம்பரம்-

இந்த கூட்டத்திற்கு இந்தியா என்ற பெயர் வைத்தது போல முன்றாவது கூட்டதை மகாரஷ்டிரா மும்பையில் மூன்றாவது கூட்டதை கூட்டி நம் கூட்டணி எப்படி செயல் பட வேண்டும் அவ்வாறு செயல் பட எந்த அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் தேர்தல் களத்தில் நாம் எப்படி செயல் பட வேண்டும். எப்படி எல்லாம் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் அவற்றில் சில குழுக்களை எல்லாம் அமைத்து வைத்து மூன்றாவது கூட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது எதிர்த்தார்கள் ஆனால் எதிர் கட்சியாக இருக்கும் போது அதனை ஆதரிக்கிறார்கள். அதிமுக பாஜகவிடம் பலிகடா ஆகபோகிறது. இந்த சட்டம் வந்தால் திமுகவிற்கு மட்டும் அல்ல அதிமுகவிற்கும் ஆபத்து தான் எந்த ஒரு அரசியல் கட்சியும் நாட்டில் செயல் படமுடியாது. ஆக இப்படி ஒரு கேவலமான ஒரு சதி திட்டத்தை தீட்டி ஒரு அதிபராக தாம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement