சைக்கோவாக நடிக்க ஆசைப்படும் பிரபல சீரியல் நடிகை ! யார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே

0
2981
- Advertisement -

அழகி’ சீரியலில் அமைதியான குடும்பப் பெண் திவ்யாவாக நடித்து, மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சோனியா. ‘முந்தானை முடிச்சு’, ‘ ‘வெள்ளைத் தாமரை’, ‘வள்ளி’, ‘அழகி’ எனப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது, திருமணமாகி மும்பையில் வசித்துவரும் அவருடன் செல்போன் வழியே சந்தித்தோம்.

-விளம்பரம்-

Azhagi serial

- Advertisement -

என் சொந்த ஊர் அந்தமான். அங்கே என்னைப் பார்த்த தயாரிப்பாளர் ஒருத்தர், சினிமாவில் நடிக்க கூப்பிட்டாங்க. நடிக்கிறதுக்கு என் வீட்டுல ஒத்துக்கலை. அப்புறம் கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்தேன். என் நம்பர் எப்படி கிடைச்சதுன்னு தெரியலை. சீரியல் டைரக்டர் ஒருத்தர் நடிக்க கூப்பிட்டாங்க. எனக்கும் நடிப்பு ஆர்வம் இருந்துச்சு.

வீட்டுல பலமுறைப் பேசி சீரியலில் நடிக்க சம்மதம் வாங்கினேன். அப்படித்தான் ‘வெள்ளைத் தாமரை’ என்ற சீரியலில் அறிமுகமானேன். தொடர்ந்து சன் டிவியின் பல சீரியல்களைப் பண்ணினேன். சில சமயம் ஒரே நாளில் ஐந்து ஷூட்டிங்கூட இருக்கும்.

-விளம்பரம்-

Serial actress soniya

துவரை எனது பெரும்பாலான சீரியல்களில் அமைதியான பொண்ணாவே நடிச்சிருக்கேன். நிஜத்திலும் நான் அப்படித்தான். என்னைச் சுற்றி இருக்கிறவங்களை எப்பவும் மகிழ்ச்சியா வெச்சுக்க நினைப்பேன். எல்லாவற்றையும் ஓகேனு ஈஸியா கடந்துடுவேன்.

‘ஒரு தடவை குடும்பத்தோடு ஷீரடிக்குப் போயிருந்தேன். பக்கத்தில் ஒரு கிராமத்திலிருந்த ஒரு அம்மா, என்னைப் பார்த்ததும், ‘நீங்க திவ்யாதானே. சூப்பரா நடிக்கறீங்க?’னு பாராட்டினாங்க. அவங்க நம்ம ஊர்காரங்களும் இல்லை. தெலுங்கு பேசும் ஒருத்தர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு பாராட்டினது எவ்வளவு பெரிய விஷயம்?.

soniya

அன்னிக்கு முழுக்க மனசு றெக்கை கட்டி பறந்துட்டிருந்துச்சு. சினிமாவில் நடிக்கும் ஆர்வம் எதுவும் இப்போதைக்கு இல்லை. ‘அருவி’ மாதிரியான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு வந்தா நிச்சயம் ஓகே சொல்லிடுவேன். சைக்கோ மாதிரியான கேரக்டரில் நடிக்க எனக்கு அதிக ஆசை. அந்த மாதிரியான வாய்ப்புக்காகக் காத்துட்டிருக்கேன். சீக்கிரமே என்னை உங்க வீட்டுத் திரையில் மீண்டும் பார்க்கலாம். அதுவரை, நடிகையா உங்களுக்கு தெரிஞ்ச நான், பிசினஸ் வுமனாகவும் சாதிக்க வாழ்த்துங்க” என்கிறார் சோனியா, நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கலந்த குரலில்.

Advertisement