எரும சாணி ஹரிஜாவுக்கு கல்யாணமா..! மாப்ள யார் தெரியுமா ?

0
4188

சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை நேற்று பார்க்க முடிந்தது. இந்த புலம்பலங்களுக்கு பின்பு இருந்தவர் எருமை சாணி புகழ் ஹரிஜாதான்.

எருமை சாணி மூலம் பலரின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவுக்கு நேற்று நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இதனால் சோகத்தில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஹரிஜா என்ன சொல்ல போகிறார் என்று தெரிந்து கொள்ள ஹரிஜாவிடம் பேசினோம்.
eruma-saaniபல பேர் நான் சென்னை பொண்ணுனு நினைச்சுட்டு இருக்காங்க. நான் பக்கா கோவை பொண்ணு. குன்னூரில்தான் எங்க வீடு இருக்கு. காலேஜ் படிக்கிறதிலிருந்தே ஷார்ட் பிலிம் பண்ணிட்டு இருந்தேன். அதற்கு அப்புறம்தான் ‘எருமை சாணி’ டீம் மெம்பர்ஸ் எல்லாம் சேர்ந்து நாங்களே ஸ்க்ரிப்ட் எழுதி ஷார்ட் பிலிம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டோம்.

எனக்கு எருமை சாணி விஜய்யை விஸ்காம் படிக்குறதிலிருந்து தெரியும். நாங்க இரண்டு பேரும் ஒரே க்ளாஸ் மேட்தான். எருமை சாணியில் இருக்கிற எல்லோரும் ஒரே க்ளாஸ் மேட்தான். எங்க ஒளிப்பதிவாளர் மட்டும்தான் எங்களோட சீனியர் செட். ஃபர்ஸ்ட் வீடியோ எருமை சாணியில் வெளியானயுடன் நிறைய லைக்ஸ், ஷேரிங்ஸ் கிடைத்தது. எதிர்பார்க்கவே இல்லை. மில்லியன் வியூவிஸ் எல்லாம் இருந்தது. நம்பவே முடியல
Harijaவருகால கணவர் பற்றிக் கேட்டோம்.
அவர் பெயர் அமர். நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவரோடும் ஷார்ட் ஃப்லிம் நடிச்சிருக்கேன். ஒரு சில ஷார்ட் ஃப்லிமில்தான் இருவரும் ஜோடியாக நடித்தோம். இது பக்கா அரேஜ் மேரேஜ். அமர் வீட்டிலிருந்து ஃபர்ஸ்ட் எங்க வீட்டில் பொண்ணு கேட்டாங்க. வீட்டில் அம்மாவும், அப்பாவும் என்கிட்ட கேட்டாங்க. உங்களுக்கு ஓகேனா எனக்கு ஓகேனு சொல்லிட்டேன்.

எங்க திருமணம் அடுத்த வருடம்தான் நடக்கும். இன்னும் திருமணதேதி முடிவாகவில்லை. என் திருமணத்துக்கு பிறகும் என் ரசிகர்களுக்காக தொடர்ந்து நடிப்பேன். அவருடைய இயக்கத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’’ என்றவரிடம் சினிமா பக்கம் வருவீங்களா என்று கேட்டோம்.
Harija நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருக்கு. பட், எதை செலக்ட் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.ருமை சாணிதான் ரசிகர்களிடம் நல்ல ரீச். அதனால், தொடர்ந்து நடிப்பேன்