கல்யாணம்…அவசியமில்லை, கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ! தல பட நடிகை ஓப்பன் டாக்

0
1326
- Advertisement -

தமிழ் சினிமா மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே, ”நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று போல்டு ஸ்டேட்மென்ட் கொடுத்தவர், நடிகை லட்சுமி மேனன். ”சமையல் செய்வது பெண்களின் விஷயம் மட்டுமே என்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது” என்று கொதித்துள்ள இவர், ‘என் வாழ்க்கையை என் மனம் சொல்கிறபடி எனக்குப் பிடித்ததுபோல வாழ்கிறேன். என்னால் ஜீன்ஸ், ஷர்ட் அணிய முடியும். கூந்தலைக் குட்டையாக வெட்டிக்கொண்டு, ஒரே மூச்சில் ஒயின் குடிக்க முடியுமெனில், எனது கோட்டைத் தாண்டுகிறேன் என்று அர்த்தமில்லை’ என்ற வாசகங்களை தன் முகநூலில் வைத்து, இன்றைய பெண்களிடையே போராளி பிம்பமாக திகழ்கிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம், அதற்காகக் கட்டாயப்படுத்துவது, திருமணம் என்கிற உறவுப் போர்வையின் கீழ் இருக்கும் ஆண்டான், அடிமை மனோபாவம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாகப் பதில் அளித்தார்.

-விளம்பரம்-

lakshmi menon

- Advertisement -

கல்யாணம்… ஃபார் மீ? என்னைக் கேட்டால், அவசியமில்லைன்னுதான் சொல்வேன். மற்ற கேர்ள்ஸ் விஷயத்தில் நான் கருத்து சொல்ல முடியாது. கல்யாணம்கிறது அழகான ரிலேஷன்ஷிப்தான். அதில் செகெண்ட் ஒப்பீனியன் இல்லை. ஆனால், அந்த உறவில் நட்பு இருக்கணும். கணவனுக்குக் கீழே அடிமையாக இருக்கிறதை ஏத்துக்க முடியாது. அதுக்காக என்னை ஃபெமினிஸ்ட்டா நினைச்சுக்க வேண்டாம்.

இப்போ ஹெல்த் இருக்கு; பணம் இருக்கு, அதனால், கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னும் நான் சொல்ல வரலை. இப்ப மட்டுமில்ல எப்பவுமே கல்யாணம் என்கிற பெயரில் அடிமைத்தனத்தை என்னால் ஏத்துக்கவே முடியாது. சில அம்மா-பொண்ணுங்களும் நல்ல தோழிகளா இருப்பாங்க. ஆனா, அதிலும் ஓர் இடைவெளி இருக்கும். இதுவே ஃப்ரெண்ட்ஸ் மத்தியில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணிப்போம். அதனால்தான், எனக்குக் கணவனா வரப்போகிறவர் நல்ல நண்பனா இருக்கணும்னு விரும்பறேன்” என்கிற லட்சுமி மேனன், பெண்களின் கடந்த காலத்தை வைத்து, நிகழ்காலத்தை எடைபோடும் ஆண்கள் பற்றியும் தன் பேச்சில் குறிப்பிட மறக்கவில்லை.

-விளம்பரம்-

lakshmi-menon

லவ் பண்ற பொண்ணையோ, மனைவியையோ, இறந்த காலத்தை வெச்சு கேரக்டரை எடைபோடக் கூடாது. கல்யாணத்துக்கு முன்னாடியோ, ஏன் ஒரு காதலுக்கு முன்னாடியோ ஒரு பொண்ணுக்கு லவ் ஃபெயிலியராகி இருந்தால், அவள் கேரக்டரையே தப்பா பேசறது சரி கிடையாது. ஆண்களின் லவ் ஃபெயிலியரை பெண்கள் எப்பவும் ஒழுக்கத்தோடு இணைச்சுப் பார்க்கிறதில்லை. இந்த மனப்பான்மை ஆண்களுக்கும் வரணும்.

காதலில் தோற்று வந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு அடுத்த காதலோ, கல்யாணமோ ஒரு நியூ ஸ்டார்ட்தானே. ஒரு தடவைதான் காதல் வரும் என்பது சுத்த ஹம்பக். ஒரு லவ் சரியா வரலைன்னா, அடுத்த ஸ்டெப்புக்கு நகர்றதுதான் புத்திசாலித்தனம். இதில் ஒழுக்கம் எந்த இடத்துல கெடுது?” எனக் கேட்கிற லஷ்மி மேனன் வார்த்தைகளில் ஹை வோல்டேஜ் மின்சாரம்.

Actress lakshmi menon

மனசைக் கொடுத்து மனசை ஷேர் பண்ணிக்கிற விஷயம், காதல். இதில், உடம்பையும் ஷேர் பண்ணியிருப்பாளோ என நினைக்கிறதே தப்பான ஆட்டிடியூட். பரஸ்பரம் நம்பிக்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தாலும், அதை ஒரு விஷயமாவே எடுத்துக்க மாட்டேன். அது என்னைப் பொறுத்தவரை தப்பும் கிடையாது!” என அழுத்தமாகச் சொல்கிறார் லட்சுமி மேனன்.

Advertisement