‘LBSNAAவில் இப்படியெல்லாம் நடக்கும்னு எங்களுக்கே தெரியுதே’ – சாமி 2 பட காட்சியை கேலி செய்யும் IAS, IPS அதிகாரிகள்.

0
860
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த படம் சாமி. இந்த படத்தில் திரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

சாமி 2 :

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி அவர்கள் மீண்டும் 2018ஆம் ஆண்டு சாமி 2 என்று இரண்டாம் பாகத்தை வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் ஆறுச்சாமி என் மகன் ராமசாமி தன் பெற்றோர்களை கொன்ற பிச்சை பெருமாளின் மகன்களை பழிவாங்கும் கதை.

- Advertisement -

செம பிளாப் அடித்த சாமி 2 :

மேலும், இந்த படமும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் தோல்விப்படமாக அமைந்த்து . இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியை தற்போது ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாகு அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சித்திருக்கிறார். அந்த வீடியோவில் ராமசாமி சிவில் சர்வீஸ் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இன்டர்வியூக்கு செல்வார். இவருக்கு LBSNAAவில் இன்டர்வியூ நடக்கும்.

சாமி படத்தில் வரும் காட்சி :

அங்கு இருக்கும் அதிகாரிகள் விக்ரமிடம் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற்று இருப்பதால் உங்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் போன்ற பதவிகளை ஒதுக்குகிறோம். இதில் எது வேண்டுமென்று நீங்கள் தேர்வு செய்து கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு விக்ரம் ஐபிஎஸ் என்று சொல்கிறார். உடனே அவருக்கு ஐபிஎஸ் வேலை கிடைக்கிறது.

-விளம்பரம்-

கேலி செய்யும் அதிகாரிகள் :

இந்த காட்சியை சுப்ரியா சாகு IAS அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த மாதிரி எல்லாம் LBSNAAவில் நேரடியாக பதவிகள் கொடுப்பது கிடையாது என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரி அவர்கள் இதற்கு கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, கடுகு போன இடம் ஆராய்வார்.

பூசணிக்காய் போன இடம் தெரியாது என்பதை போல ஒரு திரைப்பட காட்சி மேடம் என்று கிண்டல் செய்திருக்கிறார். தற்போது இந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் டீவ்ட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்களும் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அதே போல ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement