இந்த திருக்குறளிலிருந்து உருவானதுதா ’பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாட்டு – இளையராஜா

0
2416
illayaraja
- Advertisement -

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் அர்வி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

காதல், காமெடி, டைம் டிராவல் என்று ஒரு Scifi காமெடி படமாக உருவாகி இருந்த இந்த படத்தின் மூலம் மாறன், அஹானா என்று இரண்டு பேர் மிகவும் பிரமபலமடைந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மாறன் ‘இன்னும் என்ன பைத்தியகாரனாவே நெனச்சின்னு இக்கல நீ’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்துவிட்டார்.

இதையும் பாருங்க : சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர். ஆனா, பாவம் இவங்க.

- Advertisement -

அதே போல இந்த படத்தில் இடம் பெற்ற இளையராஜாவின் ரீ மிக்ஸ் பாடலான ‘பெயர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார் அஹானா. கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களால் ரசிக்கும் பாடலாக இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே இளையராஜா தான். இப்படி ஒரு நிலையில் இந்த பாடல் உருவான விதம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இளையராஜா ”இப்பாடலுக்கான மெட்டை வாலியுடம் கூறிய போது, இது என்னயா மெட்டு, இதற்கு எப்படி பாடல் எழுதுவது எனக்கேட்டார். அதற்கு ‘துப்பார்க்கு துப்பாய’ குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இப்பாடலை எழுதிவிட்டார் எனக்கூறினேன். அதன் பின்னரே இப்பாடல் உருவானது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement