நான் இன்னும் சாகவில்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாட்டுக்கு பாட்டு பி. எச். அப்துல் ஹமீட்

0
717
- Advertisement -

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் ஞாயற்று கிழமைகளில் நாம் அனைவரும் கேட்டு ரசித்த நிகழ்ச்சிகளில் ஓன்று லலிதாவின் “பாட்டுக்கு பட்டு”. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சரியான வசனம், மிரள வைக்கும் தமிழ் உச்சரிப்பு, நம்ப முடியாத ஞாபக சக்தி என மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் பி. எச். அப்துல் ஹமீட். இவரின் குரல் சமீப காலங்களில் மக்களிடையே ஒலிக்காத காரணத்தினால் பலரும் இவர் இறந்து விட்டாரோ? என்று நினைத்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் பி. எச். அப்துல் ஹமீட்.-

-விளம்பரம்-

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவரின் சிறு வயதில் வறுமை கோட்டிற்கும் கீழ் இருந்த வாழ்க்கையில் தன்னுடைய தந்தையை இடண்டாம் உலகப்போரில் இழந்து. தாய் ஹாசியா உம்மாவுடன் 4 பிள்ளைகளில் ஒருவராக வளர்ந்தவர் பி. எச். அப்துல் ஹமீட். பின்னர் இவருடைய தாயை தனக்கு தொகுப்பாளராக வேலை கிடைத்தபோது இழந்தார். அப்போதெல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அதிக செலவு ஆகும் என்பதினால் தன் தாயின் செல்லரித்த சிறிய புகைப்படம் மட்டுமே இருந்திருக்கிறது.

- Advertisement -

மின்சார வசதியே இல்லாத அந்த பகுதியில் ஆண்டிற்கு ஒருமுறை அந்தோனியார் திருவிழாவில் ஒளிபரப்பப்படும் சிவாஜி கணேசனை வசனங்களின் மூலம்தான் பேசும் திறமை வளர்ந்தது என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த திறமையை அறிந்த ஆசிரியர் அவரை நாடகங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்துள்ளார். வீர பாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் வருவதற்கு முன்னரே நாடகங்ககளில் தான் வீரபாண்டிய கட்ட பொம்மனாக நடித்து அதிலிருந்துதான் இவருடைய வழக்கை தொடங்கியது.

பின்னர் 1983ஆன் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டது. அப்போது புலம் பெயர்ந்து அண்டை நாடான இந்தியாவிற்கு வந்தவர்களிடம் பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு தெரிந்த பெயரை குறிப்பிட்டு அவருக்கு ஒன்றும் இல்லையே? என்று கேள்விகள் கேர்ப்பார்கள். அப்போது என்னுடைய பெயர் அடிபடும் போது யாரோஒருவர் `அவரும் அவரது மனைவியும் காரில் பயணித்து கொண்டிருக்கும் போது குண்டர்கள் தடுத்து காரில் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தி விட்டார்கள் என்று தகவலை சொல்லிவிட்டார்கள். அப்போது தமிழ் மொழியில் இலங்கையில் பேச முடியாது என்ற காரணத்தினால் நான் வானொலிநிலையம் செல்லவில்லை எனவே அந்த வதந்திக்கு இதுவும் ஒரு காரணம்.

-விளம்பரம்-

அதற்கு பின்னர் ஒரு நிகழ்வு என்னை நெகிழ வைத்தது`ஒரு முறை என்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அது என்னை மிகவும் பதித்தாதால் நான் ஓரு கடிதம் எழுதினேன். இதனை ஒருவர் ஆதாரமாக வைத்து ஒரு செய்தி வந்தது ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மரணம், கதறி அழுதது குடுமபம். என்று என்னுடைய புகைப்படத்துடன் வந்திருந்தது. நானும் சரி பரவாயில்லை என்னால் அவருக்கு சிறிய வருமானம் கிடைத்து என்று மகிழ்ந்தேன்.

இதற்க்கு பிறகு மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது எங்களுடைய வானொலியில் பணியாற்றும் ஒரு சகோதரியின் கணவர் பெயரும் ஹமீட். அந்த சகோதரி தன்னை விசாலாட்சிஹமீட் என்றுதான் வானொலியில் அறிவிப்பார். அவருடைய கணவர் தென்னிந்தியாவிற்கு வந்த போது இறந்து விட்டார். அப்போது அவரின் இறப்பு வானொலியில் விசாலாட்சியின் அன்பு கணவர் விசாலாட்சிஹமீட் தென்னிந்தியாவில் காலமானார் என்று ஒளிபரப்பானது.

அப்போது நான் தென்னிந்தியா பலமுறை வந்து சென்று கொண்டிருந்தேன். ஆக என்னுடைய மனைவிக்கே தொலைபேசியில் வருத்தம் தெரிவிக்கும் அழைப்பு வந்தது. ஆனால் என்னுடைய மனைவியின் பெயர் விசாலாட்சி அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தது ஆக இந்தஉலகத்தை பொறுத்தவரையில் நான் மூன்று முறை இறந்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் “பாட்டுக்கு பட்டு” பி. எச். அப்துல் ஹமீட்.

Advertisement