நடிகராக அவதாரமெடுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் – அதுவும் இப்படி ஒரு ரோல்

0
281
Mutharasan
- Advertisement -

கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இவர் மக்கள் போராட்டம், பொதுவுடமை கொள்கை என்று அரசியலில் தீவிரமாக இருக்கிறார். தற்போது இவர் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார். இவர் அரிசி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை எஸ் ஏ விஜயகுமார் இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த படத்தில் விவசாயியாக முத்தரசன் நடித்திருக்கிறார். இந்நிலையில் முத்தரசன் அரசியலில் இருந்து சினிமாவில் களம் இறங்கியது குறித்து சமீபத்தில் இயக்குனர் எஸ் ஏ விஜயகுமார் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் புளியம்பாடி கிராமம். எங்களுடைய குடும்பமே விவசாய குடும்பம் நான் சினிமாவில் இருந்தாலும் விவசாயம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

- Advertisement -

அரிசி படம்:

தமிழ்நாட்டில் டெல்லா மாவட்டங்களையும் விவசாயத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஊரில் பிறந்து விட்டு விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசவில்லை என்றால் எப்படி? அதனால் தான் என்னோட முதல் படத்திற்கே விவசாயக் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து விட்டேன். அரிசி படத்தில் விவசாய பிரச்சினைகளையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது. முதலில் நெல்லை விளைவித்து நம் தேவைக்கான உணவு, விதை நெல்லுக்கும் எடுத்துவிட்டு மீதமான நெல்லை தான் விற்பனைக்கு கொடுப்பார்கள்.

இயக்குனர் எஸ் ஏ விஜயகுமார் பேட்டி

இப்போது எல்லா நெல்லையும் விற்றுவிட்டு காசு கொடுத்து தான் அரிசியை கடையில் வாங்கி சாப்பிடுகிறோம். கடைசியில் வாங்கும் அரிசி சத்தானது கிடையாது. அதை உண்பதால் நமக்கு எந்த ஆரோக்கியமும் ஏற்படுவதில்லை. இன்னொரு பக்கம் விவசாய நிலங்களை தொழிற்சாலைகள், பிளாட்டுகள், அப்பார்ட்மெண்ட்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் விவசாயம் என்பதே காணாமல் போய்விடும் நிலை ஏற்படும். இந்த பிரச்சினையை மையமாக வைத்து தான் அரிசி படத்தை உருவாக்கியுள்ளேன்.

-விளம்பரம்-

அரிசி என்பது வெறும் தானியம் மட்டும் கிடையாது. அது மனித வாழ்க்கையின் உயிர்நாடி. இப்படி ஒரு கதைக்கு தொழில் முறை நடிகர்களை நடிக்க வைத்தால் படம் நிச்சயம் சினிமா தன்மை தான் இருக்கும். சமூகத்திற்கு சொல்ல வந்த கருத்து சேராமல் போய்விடும். அதனால் தான் முத்தரசன் அய்யாவை நடிக்க வைத்தேன். அவருக்கும் நடிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை சந்தித்தபோது முதலில் மறுத்தார். பின்பு கதையை கேட்டதும் ஒப்புக்கொண்டார். சமூகத்திற்கான கதை என்பதால் தான் அவர் ஆர்வம் காட்டி நடித்தார். அவர் தான் படத்தின் ஹீரோ. முத்தையன் என்ற கதாபாத்திரத்தில் விவசாயியாக அவர் நடிக்கவில்லை வாழ்ந்தே இருக்கிறார்.

மொத்தம் 35 நாட்கள் சூட்டிங் நடந்தது. பெரிய பெரிய நடிகர்களே 15 முறை ரீடேக் போவார்கள். ஆனால், 90 சதவீத காட்சிகளில் முத்தரசு ஐயா ரீடேக் போகவே இல்லை. ரொம்ப எதார்த்தமாக நடித்திருக்கிறார். முத்தரசன் அய்யா 17 வயதிலிருந்து பொது வாழ்க்கையில் இருக்கிறார். விவசாயிகளுக்காக இப்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார். விவசாயிகளின் பிரச்சனைகள், வலி, வேதனைகள் எல்லாமே அவருக்கு தெரியும். அதனால் தான் வசனங்களை எளிதாக உள்வாங்கி இயல்பாகவே பேசி நடித்திருந்தார். எதிர்பார்த்தது போலவே காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கிறது.

படத்தின் இன்னொரு பெரிய ஹீரோ இளையராஜா சார். அவர்தான் இசையமைத்திருக்கிறார். அரிசி முத்தரசன் அய்யாவை எப்படி ஈர்த்ததோ அப்படித்தான் இளையராஜா சாரையும் ஈர்த்து இருக்கிறது. கதை அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. சமூகத்திற்காக நல்ல விஷயம் செய்கிறீர்கள் என்று பாராட்டி இசைக்கவும் ஒத்துக் கொண்டார். அரிசி படம் முத்தரசன் அய்யா, இளையராஜா சார் போலவே உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement