கதையை கேட்டு நடிக்க மறுத்த சூர்யா – சம்மதம் வாங்கிய ஜோதிகா. சூப்பர் ஹிட் அடித்த படம்.

0
761
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார்நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் காக்க காக்க. இந்த படம் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் வேற லெவல் தூள் கிளப்பி இருப்பார். இந்நிலையில் இந்த படம் உருவாவதர்க்கு பின் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது சூர்யா காக்க காக்க படத்தில் நடிப்பதற்கு முன்னர் மௌனம் நந்தா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார.

- Advertisement -

கௌதம் மேனன் இயக்கிய போலீஸ் படம் :

அப்படி யொரு நிலையில் தான் இயக்குனர் கவுதம் மேனன் மின்னலே படத்தை முடித்துவிட்டு இரண்டாவதாக போலீசை மையமாக வைத்து ஒரு படம் எடுப்பதற்கு திட்டம் தீட்டியிருந்தார். அப்படி காவலர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எந்த கதாநாயகனை தேர்ந்தெடுப்பது என குழப்பத்தில் இருந்தார். அப்படியொரு சூழ்நிலையில் தான் நடிகர் சூர்யா இப்படத்தில் வரும் அன்புட்ச்செழியன் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என சூர்யாவை சந்தித்து தன்னுடைய படத்தின் கதையை கூறியுள்ளார்.

படத்தில் நடிக்க மறுத்த சூர்யா :

வழக்கமான காவல்துறையை பற்றிய கதையாக இல்லாமலும், கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் கிளைமாக்சில் கதாநாயகி இறப்பது போன்றும் இருந்ததால் சூர்யா இந்த கதையில் நடிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் இந்த கதையை ஜோதிகாவிடம் சொல்லியுள்ளார் கௌதம் மேனன். தொடக்கத்தில் இந்த கதையில் அஜித், விஜய் போன்றவர்களை நடிக்க அறிவுரை கூறிய ஜோதிகா பின்னர் கதை தனக்கு பிடித்திருந்ததினாலும் அதே நேரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக சூர்யாவிடம் இந்த படத்திற்கு பரிந்துரை செய்துள்ளார் நடிகை ஜோதிகா.

-விளம்பரம்-

காக்க காக்க படம் :

இப்படிப்பட்ட நிலையில் தான் நடிகர் சூர்யா, கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்புதல் கொடுத்துள்ளார். அப்படி சூர்யா ஜோதிகா நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான திரைப்படம் தான் காக்க காக்க. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் சூர்யாவின் அன்புச்செழியன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பவரவேற்பை பெற்றிருந்தது. அதோடு ஹாரிஸ் ஜெயராஜின் இசை படத்திற்கு மேலும் வலுவூட்டியது.

தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முதலாக காவலர் அதிகாரியாக நடித்த “காக்க காக்க” திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. மேலும் இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக்குக்கும் செய்யப்பட்டது. என்னதான் நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் “காக்க காக்க” திரைப்படம் சூர்யாவின் திரை வாழ்கையில் முக்கியமாக ஒரு படமாகதிகழ்ந்து வருகிறது. .

Advertisement