லியோ படம் இந்த படத்தின் காப்பி, Sorry Sorry இன்ஸ்பிரேஷனா – அட்லீ ரேஞ்சுக்கு இறங்கிய லோக்கி

0
1260
- Advertisement -

விஜய்யின் லியோ படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற புது சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

லியோ படம்:

அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள், விழா நடைபெறுவதற்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. ஆனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக `ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

படம் குறித்த அப்டேட்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலரை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான லியோ டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏராளமான திரையில் லியோ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் 25000-30,000 திரையரங்கில் படம் வெளியாக இருக்கிறது. பிரீமியர் ஷோ எதுவும் கிடையாது.

-விளம்பரம்-

லியோ படம் காப்பி சர்ச்சை:

இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை என்பதால் படம் ரிலீசுக்கு முன்னால் ரசிகர்களுக்காக விஜய் பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற புது சர்ச்சை எழுந்து இருக்கிறது. அதாவது, லியோ ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் கொடுத்த ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் காப்பி என்று கூறப்படுகிறது. இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. ஒரு ஊரில் ஹீரோ ஹோட்டல் வைத்து நடத்தி வருவார்.

லியோ கதை:

அந்த ஊருக்குள் வரும் திருடர்களை அவர் கொல்கிறார். இதனால் ஹீரோவை கொலை செய்ய பல கேங்ஸ்டர்கள் வருகிறார்கள். அடுத்தடுத்து ஹீரோ வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதே பாணியில்தான் லியோ படத்தையும் லோகேஷ் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த இரண்டு படத்தின் டிரைலரையும் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் கூறியிருக்கிறார். எது உண்மை என்று படம் வந்த பிறகு தான் தெரிய வரும்.

Advertisement