“விழுப்புரம் அரசு பள்ளியில் படித்து என்னால் முடிந்தது உங்களாலும் ….” இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இஸ்ரோ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்.

0
1444
- Advertisement -

இந்திய முழுவது நேற்று மாலை எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 3 விக்ரம் லேன்டர் வெற்றிகரமாக நேற்று தலையிரங்கியது. இதை இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பினரும் கொண்டாடி தீர்த்தனர். சந்திரயான் 3-இன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தமிழகத்தை சேர்ந்தவர் ஒட்டு மொத்தம் தேசமும் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

-விளம்பரம்-

அதனை தமிழக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளர். அதில் அவர் “மாணவர்களே, சந்திரயான்3 திட்ட இயக்குநர் திரு P. வீர முத்துவேல், அரசு பள்ளியில் படித்தவர். அவரால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்கலாம்” என்றும் மாணவர்களுக்கு கூறியுள்ளார்.    

- Advertisement -

வீர முத்துவேல் கூறியது:

“எனது பெயர் வீர முத்துவேல் இந்த வாய்ப்பை அளித்த மயில்சாமி அண்ணாதுரை சாருக்கு நன்றி, தற்போது பெங்களூரு இஸ்ரோ மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னை பத்தி சொல்லவேண்டுமானால் நான் பிறந்து வளர்ந்தது விழுப்புரத்தில். நான் எனது பள்ளி படிப்பை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளி காலத்தில் நான் சுமாராகத்தான் படிப்பேன். பத்தாவது பிறகு என்ன படிக்க வேண்டும் எங்கு படிக்கச் வேண்டும் என்று எந்த ஒரு திட்டமும் இல்லை. வீட்டில் பெற்றோருக்கு யாருக்கும் எந்த ஒரு கல்வி பின்புலமும் இல்லை.

நண்பர்களும் சேர்ந்து டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பில் (DME) சேர்ந்தேன். படிக்கும் போது இன்ஜினியரிங் மீது ஆர்வம் வந்தது, அதனால் என்னால் 90% மதிப்பெண் எடுக்க முடிந்தது. அதன் பின் மெரிட்டில் BE ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் இணைந்தேன். அனைத்து செமஸ்டர்களிலும் முதல் அல்லது இரண்டாம் இடம் வருவேன். அதற்காக எல்லா நேரங்களிலும் படித்து கொண்டு இருக்க மாட்டேன். படிக்கும் போது 100% கவனத்துடன் புரிந்து படிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதுவே எனக்கு நல்ல சதவீகிதம் மதிப்பெனை பெற்று தந்தது.அதனுடைய வெளிப்படக ME நல்ல REC கல்லுரி திருச்சியில் சேர்ந்தேன்.

-விளம்பரம்-

BEயில் படித்து போல அனைத்து செமஸ்டர்களிலும் முதல் அல்லது இரண்டாம் மதிப்பெண்களை பெறுவேன் 9.17 CGPA உடன் கல்லுரி படிப்பை முடித்தேன். Campus Interview மூலமாக லட்சுமி மிஷன் வோர்க்ஸ் கோயம்பத்தூரில் சீனியர் இன்ஜினியராக சேர்ந்தேன். அதில் பணிபுரிந்து கொண்டு இருந்த காலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போதே எனக்கு ஏரோஸ்பேஸ் ரிசேர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) மீது எனக்கு அதிக ஆர்வம்  உண்டானது. அப்போது தான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பெங்களூர்ல ஹெலிகாப்டர் டிவிஷன் என்று சொல்கிறார் ரோட்டரி விங் ரிசர்ச் அண்ட் டிசைன் இன்ஜினியரா பணிபுரிந்தேன் . கொஞ்சம் காலத்திற்கு பிறகு என்னோட கனவான  இஸ்ரோ சாட்டிலைட் சென்டர்ல பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

முதலில் ப்ராஜெக்ட் இன்ஜினியர் ஆகவும் அதன் பின் ப்ராஜெக்ட் மேனேஜராகவும் நிறைய ரிமோட் அண்ட் ரிசல்ட் சயிண்டிபிக் சாட்லைட் பணி புரிந்துள்ளேன். இருப்பினும் என்னுடைய ஆராய்ச்சிகளை நான் விட வில்லை. அதனுடைய வெளிப்பாடாகவே Phd IIT மெட்ராஸ் அதில் சேர்ந்தேன். ஒரு நோவல் ஆராய்ச்சி எனப்படும் வைப்ரேஷன் செபரேஷன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டிலைட்ஸ் எனப்படும் தலைப்பில் நவீன ஆராய்ச்சியை மேற்கொண்டேன்.

அதன் பின் வெற்றிகரமாக Phd முடித்தேன். இஸ்ரோவில் முதல் நானோ சாட்லைட் அணியை தலைமை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தது. 3 நானோ சாட்லைட் அனுப்பி வைத்துள்ளோம். அதன் பின் அசோசியட் இயக்குனராக மிகப் பெரிய சந்திரயான் 2 வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

அதன் பின் இஸ்ரோ எனக்கு திட்ட இயக்குனராக சந்திரயான் 3 வழிநடத்த வாய்ப்பு கொடுத்துள்ளனர். நான் ஒரு சாதாரண நபர் என்னால் இந்த இடத்திற்கு வரமுடியும் என்றால் அனைவராலும் முடியும்.அதை நாம் பயன்படுத்துக் கொள்கிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தன்னொழுக்கம் 100 சதவீதம் ஈடுபாடு அதுவும் எதிர்பார்ப்புகளற்ற ஈடுபாடு, கடின உழைப்பு மற்றும் நமக்கு இருக்கும் தனித்துவம் ஆகியன நிச்சயமாக வெற்றி தரும்.

கடின உழைப்பு பலனில்லாமல் போகவேபோகாது. அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நன்றி என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் பரவி வருகிறது.          

Advertisement