அட்லீ – நயன்தாராவின் முதல் பாலிவுட் என்ட்ரி எப்படி – ஜவான் முழு விமர்சனம் இதோ.

0
2120
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் அட்லியும் ஒருவர். தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் ஜவான் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆரம்பத்தில் இந்திய எல்லையில் தான் கதை துவங்குகிறது. உயிர் போகும் நிலையில் கிடக்கும் ஷாருக்கானை மக்கள் காப்பாற்றுகிறார்கள். அவர் எப்படியோ பிழைத்து விடுகிறார். அதற்குப் பிறகு அவர் ஏன் வந்தார்? அவர் யார்? என்ற பிளாஷ்பேக்கை 30 ஆண்டுகளுக்கு பிறகு என்று கதை தொடங்குகிறது. அதில் ஷாருக்கான் உடன் சேர்ந்து பெண்கள் பலர் அரசுக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் இந்தியன் தாதாக்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர்களை எதிர்க்கும் வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க நயன்தாரா முயற்சிக்கும் போது தான் நயன்-ஷாருக்கானுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், அந்த குற்றவாளி தான் ஷாருக்கான். திருமணம் நடந்த அன்று தான் ஷாருக்கான் உண்மையை சொல்ல வருகிறார். அதற்குள் உண்மை அறிந்த நயன்தாரா அவரை கைது செய்கிறார். பின் வில்லன் விஜய் சேதுபதி திட்டமிட்டபடி நயன்தாரா-ஷாருக்கானை தாக்குகிறார்.

அப்போது ஷாருக்கானை காப்பாற்ற இன்னொரு சாருக்கான் வருகிறார். இறுதியில் இந்த இரண்டு ஷாருக்கான் யார்? என்ன சம்பந்தம்? விஜய் சேதுபதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் என்ன தவறு செய்தார்? ஏன் அவர் குற்றவாளி? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு, டான்ஸ், ஆக்சன் காட்சி எல்லாமே சிறப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

ஆனால், சில இடங்களில் விஜய் உடைய மேனரிசத்தை அப்படியே இயக்குனர் காண்பித்து இருக்கிறார். இவரை அடுத்து போலீஸ் அதிகாரியாக வரும் நயன்தாரா ஷாருக்கானுக்கு இணையாக மிரட்டி இருக்கிறார். இவர் பின் வில்லனாக வரும் விஜய் சேதுபதி இவர்கள் இருவரையும் தூக்கி சாப்பிட்டார் என்றே சொல்லலாம். நடிப்பு, வசனம், வில்லத்தனம் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். அதிகாரத்தை கையில் எடுப்பதும், பிரச்சனை வரும்போது அதை சமாளிப்பதும் என்று சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அட்லி படம் என்று பலரும் எதிர்பார்ப்புடன் சென்றார்கள். அது மட்டுமில்லாமல் விஜய் படம் போல் மாஸாக, கிளாஸ் ஆக இருக்கும் என்று நினைத்தார்கள். முதல் பாதி படம் சிறப்பாக சென்றது. அதற்கு பிறகு கதை எங்கே போகிறது என்று தெரியாமல் சென்றது. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை கொடுத்த அட்லி கதை களத்தில் கவனம் செலுத்தி இருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும்.

சிம்பிளான கதையை வளவள என்று இழுத்துக் கொடுத்திருக்கிறார். பார்வையாளர்களின் பொறுமையை சோதித்து இருக்கிறார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் யூகிக்க கூடிய அளவிற்கு காட்சிகளும் இருக்கிறது. அனிருத்தின் இசை, விஷ்ணுவின் கேமரா மட்டும் தான் படத்திற்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. மொத்தத்தில் சட்னி, சாம்பார் இல்லாத இட்லி போல தான் சுவாரசியமே இல்லாத கதையை அட்லி கொடுத்திருக்கிறார். ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம் என்று சொல்லலாம்.

நிறை:

நடிகர்கள் நடிப்பு சிறப்பு

பின்னணி இசை

கேமரா ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

முதல் பாதி ஓகே

குறை:

அழுத்தம் இல்லாத கதைகளம்

யூகிக்கக்கூடிய காட்சிகள்

இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து விட்டது

கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

மொத்தத்தில் ஜவான்-கை கொடுக்கவில்லை.

Advertisement