அவங்க முன்னாடி பாராட்டிட்டு, அவங்க போனதும் என்ன ஆள வச்சி அடிச்சார் – வடிவேலுவின் கொடூர பக்கத்தை சொன்ன காதல் சுகுமார்.

0
2732
vadivelu
- Advertisement -

காதல் சுகுமாரை நடிகர் வடிவேல் தாக்கியிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் பரத், சந்தியா நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் மூலம் நடிகர் சுகுமார் மக்களிடையே பிரபலமானார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் காதல் படத்திற்கு முன்பாகவே இவர் கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அறை எண் 305ல் கடவுள், விசிடி, என் ஆளோட செருப்ப காணோம்’ போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து நடிகர் சுகுமார் அவர்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மனுஷனா நீ’ என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், இவர் சினிமா உலகில் நடிகர் மட்டும் இல்லாமல் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார்.

- Advertisement -

சுகுமார் திரைப்பயணம்:

இவர் 2015 ஆம் ஆண்டு ‘திருட்டு விசிடி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் 2016 ஆம் ஆண்டு “சும்மா ஆடுவோம்” என்று கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை படமாக இயக்கி இருந்தார். இருந்தாலும் இவரின் படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. தற்போது வாய்ப்பு தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு குறித்து சுகுமார் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், ஒரு முறை கலகலப்பு என்ற ஒரு படத்தில் நடிக்க நான் கமிட் ஆகி இருந்தேன். அந்த படத்தில் என்னை வடிவேலு போல் நடிக்க சொன்னார்கள்.

சுகுமார் அளித்த பேட்டி:

அதற்கு நான் முடியாது என்று சொல்லியும் அவர்கள் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அதனால் நானும் நடித்தேன். கிட்டத்தட்ட அப்படியே வடிவேலு மாதிரி இருக்கிறது என்று பலரும் பாராட்டி இருந்தார்கள். அந்த சமயத்தில் தான் வடிவேலுக்கு உடல்நிலை சரியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது முத்துக்களையும் போண்டாமணியும் வடிவேலுவை சந்திக்க என்னை அழைத்துக் கொண்டு சென்றார்கள். நானும் குருவை பார்க்கலாம் என்று பூங்கொத்து எல்லாம் வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன்.

-விளம்பரம்-

வடிவேலு-சுகுமார் உரையாடல்:

அவரைப் பார்த்து, குருவே இல்லாமல் வித்தை கற்றுக் கொண்டேன் என்று அவரிடம் சொன்னேன். உடனே அவர், ஆத்தாவும் என் வயிற்றில் பிறந்தது போல நீ இருக்கிறாய் என்று என்னை சொன்னார். பின் முத்துக்களையும் போண்டாமணியும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். நானும் கிளம்பலாம் என்று இருக்கும்போது வடிவேலு நில் என்று சொன்னார். பின் ஏண்டா தம்பி ஒவ்வொரு கம்பெனியா சென்று நான் வடிவேல் போல நடிக்கிறேன் என்று சொல்கிறாயா? என்று கேட்டார். அதற்கு நான், உங்களைப் போல் நடிப்பேன் என்று உலகத்திற்கு தெரியும். ஆனால், சினிமாவில் எல்லாம் அப்படி பண்ண மாட்டேன் என்று சொன்னேன்.

வடிவேலு ஆட்கள் அடித்த காரணம்:

உடனே அவர் இல்லையே ஒரு படத்தில் நீ என்னை போலவே நடித்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன் என்று சொன்னவுடன் அந்த வாய்ப்பு அதுவா வந்தது. நான் எதுவும் செய்யவில்லை. இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் என்று சொன்னேன். உடனே பின்னால் இருந்தவர் என்னடா அவரை எதிர்த்து பேசுகிறாய் என்று சொல்லி என்னை தலையில் அடித்து கீழே தள்ளினார். அதன் பின் தாறுமாறாக என்னை அடித்தார்கள். பயந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் நான் இனிமேல் நடிக்க மாட்டேன் ஊரை விட்டு ஓடி விடுகிறேன் என்று சொல்லி அங்கிருந்து தப்பித்து வந்தேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement