சமீப காலமாகவே தமிழில் வெளியான பல படங்களில் மற்ற மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியில் பல தமிழ் படங்கள் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் “கைதி”. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள்.
#Kaithi Remake Nu Solli Ennada Panni Vachirukeenga 😵 https://t.co/IZ20Uy4VrX pic.twitter.com/IdhLFaRqTn
— Vadivelu memes (@Vadivelumemes) February 20, 2023
இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், பொன்வண்ணன், மகாநதி சங்கர், ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படம். சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் தான் கைதி. கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கி இருந்தார் இயக்குனர்.
கைதி இந்தி ரீ மேக் :
விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி படம் திரை அரங்கிற்கு வந்தது. கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கைதி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்று தந்தது.
Kaithi remake la Item song ah? 🤷 pic.twitter.com/SQ0J7IKeph
— Naveen (@naveenbalan_) February 24, 2023
படத்தை இயக்கும் அஜய் தேவ்கன் :
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்வதாக அறிவித்தனர்.இந்த படத்தில் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடித்துள்ளார். இதற்கு போலா என்ற தலைப்பை வைத்து இருக்கின்றனர். இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது அதில் அஜய் தேவ்கன் கையில் சூலத்தை வைத்து எல்லாம் சண்டை போட்ட காட்சிகளை பார்த்து இது என்ன கைதியா aquaman ரீ மேக்கா என்று தமிழ் ரசிகர்கள் பலரும் கலாய்த்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை செய்ய விருக்கின்றனர். அதாவது இந்த படத்தில் நரேன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை தபு நடிக்க இருக்கிறாராம்.
Dei nee kaithi remake panriya ila Annathathe remake panriya da ? @ajaydevgn https://t.co/aPVZ4FmxEM
— ᶜᴿᴬᶻᵞ★KaRTHiツ (@crazykarthi42) February 3, 2023
பிஜய் ரோலில் தபு :
பொதுவாக ஒரு மொழயில் இருந்து மற்ற மொழிக்கு ரீ-மேக் செய்யப்படும் படங்களில் ஒரு சில மாற்றங்களை செய்து வெளியிடுவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால், கைதி படத்தில் நாயகியை சேர்த்தால் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனை கெடுத்தது போல இருக்கும் என்பதே பலரின் கருத்து. அதுமட்டுமல்லாது அமலா பால், தபு மற்றும் ராய் லட்சுமி ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
ஐட்டம் சாங் :
அதே போல இந்த படத்தில் தபு மட்டும் இல்லை இதில் அமலா பால், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் படத்தின் flash back காட்சியில் நடித்து இருக்கிறாராம். இதையெல்லாம் தாண்டி லட்சுமி ராய் இந்த படத்தில் ஒரு ஐட்டம் சாங் ஒன்றில் ஆட இருக்கிறாராம். ரீமேக் என்கிற பெயரில் கைதி படத்தை பாலிவுட்டில் படாத பாடு படுத்தி வருவதை பார்த்த தமிழ் ரசிகர்கள் என்ன கொடுமை சார் இது என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.