இந்தியன் 2 பட நாயகி நான் தான்..!அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட நடிகை..!

0
387
indian-2

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது.

kajal agarwal

சமீபத்தில் இந்த படத்தின் ஆரம்ப பணிகளும் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் பின்னர் கஜால் அகர்வால் கதாநாயகியாக கமிட் ஆகினார் என்ற தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதை பற்றி அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால், நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் சாய் என்பவருடன் கவச்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்ற காஜலிடம் உங்களின் அடுத்த படங்கள் என்னென்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்க்கு பதிலளித்த காஜல், என்னுடைய அடுத்த படம் சாயுடன் தான். மேலும், கமல் சாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியன் 2 படத்தில் கஜால் தான் கதாநாயகி என்பது உறுதியாகியுள்ளது.