ஸ்ரீ ரெட்டி பாலியல் சர்ச்சைக்கு பதிலளித்த காஜல் அகர்வால்..? என்ன சொன்னார் தெரியுமா..?

0
472

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ‘தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் திரையுலக பிரபலங்களை பற்றிய சர்ச்சையான விடயங்ககளை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.பல்வேறு தரப்பினரும் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் தென்னிந்திய முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Actress sri reddy

- Advertisement -

நடிகை ஸ்ரீரெட்டி கூறி வரும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், இது பின்புலம் இல்லாத குற்றச்சாட்டு என்றும் பலரும் கூறி வருகின்றனர். அதே போல ‘தான் இதை எதையும் விளம்பரத்திற்காக செய்யவில்லை, யாராவது ஒருவர் இந்த விடயங்களை வெளியில் கொண்டு வர வேண்டும், அதனால் தான் இதை செய்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

அதே போல சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரீரெட்டி தனது முக நூல் பக்கத்தில் தமிழ் சினிமா நடிகைகளான நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகளின் லிஸ்டுகள் என் லிஸ்டை விட பெரியது என்பது போல ஒரு சர்ச்சையான கருத்தினை தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

Kajal-Agarwal

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி கூறி வரும் சர்ச்சையான கருத்து குறித்து பதிலளித்துள்ள நடிகை காஜல் “சினிமாவில் நடிகைகளை பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. நான் அதுபோல எந்த ஒரு அனுபவத்தையும் எதிர்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement