டிவி நிகழ்ச்சியில் கண்ணான கண்ணே பாடிய மகன், கலங்கிய காலா மாஸ்டர் – வைரலாகும் வீடியோ.

0
1277
kala
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன கலைஞராக திகழ்பவர் கலா மாஸ்டர். இவர் மானாட மயிலாட என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை பல பாகங்களாக கொண்டு சென்றார்கள். மேலும், இவர்களுடைய குடும்பமே நடன குடும்பம் என்ற சொல்லலாம். இவருடைய மைத்துனர் மாஸ்டர் ரகுராம் மூலம் தான் இவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைத்தது. இவர் தன்னுடைய 12 வயதிலிருந்து நடன உதவியாளராக பணியாற்றி வருகிறார்.1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடன இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் 30 வருடத்திற்கு மேலாக இந்திய சினிமாவில் முக்கிய நடன இயக்குனராக பங்கு வகித்து வருகிறார். இவருடைய சகோதரி பிருந்தாவும் பிரபல நடன இயக்குனர் ஆவார். மேலும், கலா மாஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் ஆகிய பல மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தற்போது கலா மாஸ்டர் நடிகையாக சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காத்துவாக்குல இரண்டு காதல்.

- Advertisement -

காத்துவாக்குல இரண்டு காதல் படம்:

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் இந்த படத்தின் மூலம் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்தனை வருடங்களாக திரைக்குப் பின்னால் ஜொலித்துக் கொண்டிருந்த கலா மாஸ்டர் முதல் முறையாக திரைக்கு முன் தோன்ற இருக்கிறார்.

கலா மாஸ்டர் நடித்த படம்:

இதனால் இவரை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே இவர் கோவிந்தராஜன் என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் கலா மாஸ்டர் 2004 ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வித்யுத் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கலா மாஸ்டர் அவர்கள் சமீபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில்
கலந்து இருந்தார்.

-விளம்பரம்-

தன் கமகன் பற்றி கலா மாஸ்டர் கூறியது:

அதில் அவர் தன்னுடைய குடும்பம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் கலா மாஸ்டர் அவர்கள் கூறியிருப்பது, எனக்கு எப்போதுமே ரோல் மாடல் என்றால் என் அம்மா தான். அவரைப்போல் தைரியசாலி எங்குமே நான் பார்த்ததில்லை. ஏழு பெண்களை வைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து போராடியவர். எங்களை தைரியத்துடன் வளர்த்தார். அவருடைய தைரியத்தில் தான் நான் இங்கு இப்படி இருக்கிறேன். அதேபோல் என்னுடைய உயிர் என்றால் என் மகன். எனக்கு திருமணம் ஆனது, குழந்தை பிறந்தது எல்லாமே தாமதமாகத்தான். 37 வயதின் போது தான் நான் கர்ப்பமாக இருந்தேன்.

கலா மாஸ்டர் மகன் பாடிய வீடியோ:

அப்போது பட சூட்டிங் என்று பிசியாக இருந்தால் எல்லோரும் என்னை திட்டுவார்கள். இருந்தாலும் நான் அதைப்பற்றி கவலைப்படாமல் தைரியமாக போனேன். எனக்கு கடவுள் கொடுத்த வரம் வித்யுத் என்று கூறினார். உடனே அவர் மகன் வீடியோவில் வந்து கலா மாஸ்டரிடம் பேசுகிறார். அதில் அவர் கலா மாஸ்டருக்காக கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்ற பாடலை பாடியிருந்தார். இவர் பாடியதைக் கேட்டு கலா மாஸ்டர் மட்டுமில்லாமல் அங்கிருந்து எல்லோருமே கண் கலங்கினார்கள். அந்தளவிற்கு அருமையாக பாடினார். இப்படி கலா மாஸ்டர் மகன் பாடியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் கலா மாஸ்டர் மகன் இப்படி அருமையாக பாடுவாரா!என்று பாராட்டி வருகிறார்கள்.

Advertisement