சோறுபோட்ட விவசாயிக்கு உதவுங்கள்..!நேரடியாக சென்று உதவும் நிஷா..!

0
873
- Advertisement -

கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாகக் களத்துக்குச் சென்று உதவிகள் செய்துவருகிறார், `கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா. அறந்தாங்கி நிஷாவுடைய காமெடி பலருக்கும் பிடிக்கும்.

-விளம்பரம்-

aranthangi-nisha

- Advertisement -

தானும் சிரித்துக்கொண்டு மற்றவர்களைச் சிரிக்க வைப்பதோடு, களத்தில் இறங்கிச் செயல்படும் சமூக அக்கறையும் கொண்டவர்.அறந்தாங்கி மட்டுமல்லாது பல கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் செய்து வருகிறார்.

சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நிஷா பேசியுள்ளதாவது, இப்போ தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உதவிபண்ணிட்டு இருக்கேன். அங்கே உள்ள மக்களுக்கு இப்ப வரைக்கும் எந்த உதவிகளுமே கிடைக்கல. அவங்கள்ல பலரும் கைக்குழந்தைங்கள வெச்சிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. பலரோட பசியை போக்கின விவசாயி இன்னைக்கு அவங்க பசியால தவிக்கிறாங்க.

-விளம்பரம்-

சிட்டின்னா அவங்களுடைய கஷ்டம் வெளியில் தெரியும். ஆனா, யாருக்கும் தெரியாம ஒரு கிராமத்துக்குள்ளே இருக்குற இவங்களுடைய கஷ்டம் யாருக்குமே தெரியாது. அவங்களுடைய கஷ்டத்தை மீடியாதான் வெளிக்கொண்டு வரணும். அதனாலதான் நான் எல்லா கிராமங்களுக்கும் போய்ட்டு இருக்கேன். உங்களால் முடிஞ்ச உதவிகளை நீங்களும் செய்யுங்க என்று உருக்கமுடம் கூறியுள்ளார்.

Advertisement