அருள்நிதியின் ஆக்ரோஷ வேட்டையில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
2152
Arulnidhi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருள்நிதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தில் தூஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தை சை கெளதம ராஜ் இயக்கியிருக்கிறார். பல எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தெக்குப்பட்டி கிராமத்தில் மேல தெருவில் அருள்நிதி வசிக்கிறார். கீழே தெருவில் சந்தோஷ் பிரதாப் வசிக்கிறார். இருவருமே சிறுவயதிலிருந்து நல்ல நண்பர்கள். பள்ளியில் படிக்கும் போதே தன் உயிரைக் காப்பாற்றிய சந்தோஷ் மீது அருள்நிதி பயங்கர நட்பாக இருக்கிறார். இன்னொரு இவர்களின் நட்பு பக்கம் ஜாதி மீது பாசம் மிக்கவராக அருள்நிதி அப்பாவும், முன்னாள் ஊர் தலைவரான யார் கண்ணனுக்கும் பிடிக்கவில்லை.

- Advertisement -

அவர் சார்ந்த ஜாதி கட்சியின் மாவட்ட செயலாளராக ராஜசிம்மன் இருக்கிறார். தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த மாவட்டத்தில் அதிகரிக்க பொதுக்கூட்டம் ஒன்று நடத்த முயற்சி செய்கிறார். அப்போது பேனர் ஒன்றை சந்தோஷ் பிரதாப் கிழித்திருக்கிறார். இதனால் ராஜசிம்மனுக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிபோகிறது. அடுத்த சில நாட்களிலேயே சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்படுகிறார். இதை அறிந்து இந்த பழி அருள்நிதி மீது விழுகிறது.

இதிலிருந்து அருள்நிதி தப்பி ஓடுகிறார். ஆனால், காவல் துறை அருள்நிதியை தீவிரமாக தேடுகிறது. இறுதியில் சந்தோஷை கொன்றது யார்? அருள்நிதி பழிக்கு பழி வாங்கினாரா? அடுத்து என்ன நடக்கிறது? என்பது தான் படத்தின் மீதி கதை. மூர்க்க சாமி கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்தி இருக்கிறார். இவரின் கிடாமிசையும், உருட்டு கண்களும் அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தி இருக்கிறது. எதிரிகளை உதைத்து பந்தாடுவது, தூக்கிப் போட்டு மிதிப்பது என ஆவேச காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் அருள்நிதி.

-விளம்பரம்-

இவரை அடுத்து சந்தோஷ் பிரதாப் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. இடைவெளி வரை ரொமான்ஸ், அருள்நிதி- சந்தோஷ் நட்பு என படம் பொறுமையாக செல்கிறது. இடைவெளிக்கு பின் கதை அப்படியே மாறுகிறது. அருள்நிதி முரட்டுத்தனமாக தாண்டவம் ஆடுகிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் பயங்கர கொடூரமாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். படம் ஜாதியை மையமாக வைத்த கதையாக இருக்கிறது.

படத்தில் பாடல்கள் எல்லாம் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஒளிப்பதிவு பக்க பலமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகள் அருமையாக இருக்கிறது. படத்தில் ஆரம்பத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் கதை சென்றாலும் இறுதி நன்றாக இருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு. இன்னும் கொஞ்சம் கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் அருள்நிதியின் இந்த படம் சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

அருள்நிதி, சந்தோஷ் பிரதாப் நடிப்பு சிறப்பு

சாதியை கடந்த நட்பு

ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

கிளைமாக்ஸ் காட்சி சூப்பர்

அதிரடி ஆக்சன் படமாக இருக்கிறது

குறை :

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

பாடல்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

வழக்கம் போல ஜாதியை மையமாக கொண்ட கதை

இயக்குனர் இன்னும் கதைக்களத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் கழுவேத்தி மூர்க்கன்- காட்டாறு

Advertisement