தமிழ் சினிமாவில் அண்ணன் – தங்கை பாச கதைக்கு வித்திட்ட பாச மலர் – 62 ஆண்டுகளை கடந்த அழகு காவியம்

0
2108
paasamalar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவருடைய நடிப்பிற்கு இன்றும் யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். இதனால் இவரை நடிகர் திலகம் என்று பலரும் அழைக்கிறார்கள். அதோடு அண்ணன்- தங்கை பாசத்தை முதன் முதலில் உலகிற்கு புரிய வைத்தவரும் சிவாஜி கணேசன் தான். அந்த வகையில் அண்ணன்- தங்கை பாசம் என்றால் முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது பாசமலர் படம் தான்.

-விளம்பரம்-

சிவாஜி கணேசன்- சாவித்திரி இந்த படத்தில் சகோதர- சகோதரிகளாக நடித்திருந்தார்கள். ஜெமினி கணேசன் சாவித்திரியின் கணவராக நடித்திருந்தார். இந்த படம் 1961 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பல ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் நம் மனதில் அழியாத காவியமாய் பாசமலர் படம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து பலரும் மறந்திடாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

- Advertisement -

பாசமலர் படம்:

இந்த பாசமலர் படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவருக்கு கணவராக நடிக்க ஜெமினி கணேசனை தேர்வு செய்தார்கள். ஆனால், இது இவர்களுடைய காதல் கதையை பற்றி அல்ல. அண்ணன் தங்கை பாச கதையை பற்றிய படம். இதனால் அண்ணனாக யார் போடலாம்? என்று பட குழு தீவிரமாக யோசித்தது. அதற்கு பிறகுதான் சிவாஜி கணேசன் நினைவுக்கு வந்தார்.

சிவாஜி கணேசன்- சாவித்திரி குறித்த தகவல்:

பின் சிவாஜி கணேசன்- சாவித்திரி அண்ணன் தங்கையாக தேர்வு செய்திருந்தார்கள். ‘என் தங்கைதான் எனக்கு எல்லாம், என் உலகமே அவதான்’ என்ற வசனம் உலகம் முழுவதும் பிரபலம் ஆவதற்கு இந்த படம் தான் காரணம். ஏற்கனவே திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் சிவனாகவும், சாவித்திரி பார்வதியாகவும் நடித்திருப்பார்கள். இதை பார்த்து பலரும் சிவன்- பார்வதி வேடத்தில் இவர்களுடைய போட்டோவை பார்த்து தான் பிரேம் போடவே ஆரம்பித்தார்கள். அந்த அளவிற்கு இவர்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கக் கூடிய திறமை கொண்ட நடிகர்கள்.

-விளம்பரம்-

அண்ணன் தங்கை படம்:

அதேபோல் பாசமலர் படத்தில் உண்மையான அண்ணன் தங்கை போலவே இவர்கள் நடித்திருந்தார்கள்.
மேலும், இந்த படம் வெளிவந்த பிறகு முதலில் ஒரு ஆண் பிள்ளை பிறந்து அடுத்து பெண் பிள்ளை பிறந்தால் அந்த குழந்தைக்கு சாவித்திரியின் ராதா கதாபாத்திர பெயர் தான் வைத்தார்கள். அந்த அளவிற்கு இந்த படம் மக்களோடு வாழ்வில் ஒன்றாகி விட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பிறகு தான் நிறைய அண்ணன் தங்கை படங்கள் வெளிவந்தது. குறிப்பாக சிவகார்த்திகேயன் எங்க வீட்டு பிள்ளை படமும் இதை மையமாகக் கொண்டுதான் வந்தது.

பாசமலர் படம் குறித்த தகவல்:

பாசமலர் படத்தில் வந்த வசனம் கூட இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும். தமிழ் மொழியில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லப்படும் படங்களில் பாசமலரும் ஒன்று. இது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், சிங்களம் போன்ற பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு டிஜிட்டல் உருவாக்கம் செய்யப்பட்டு 70 திரையரங்களில் இந்த படம் ஒரு மாதம் வெளியாகி இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தை பார்த்த பல பேரும் மீண்டும் பாசமலரை பார்த்து கண்ணீர் கடலில் மூழ்கி இருந்தார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெண்கள், இருந்தால் இப்படி ஒரு அண்ணன் தங்கையாக பிறக்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். இப்படி காலங்கள் கடந்தாலும் பேசப்படும் பாசமலர் படம் வெளியாகி 62 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. தற்போதைய இதை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்

Advertisement