அஞ்சாத துணிச்சல் அவரின் அடையாளம் – கேப்டன் இறப்பு குறித்து கமல் உருக்கம்.

0
482
- Advertisement -

விஜயகாந்த் இறப்பு குறித்து கமல்ஹாசன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து இருந்தார்கள்.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி இருந்தது. பின் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று பேட்டி அளித்து இருந்தார். மேலும், கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவிற்கு தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

கேப்டன் மறைவு:

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலமானார் என்று மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

கமல் தெரிவித்த இரங்கல்:

அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவிலும் விஜயகாந்தின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

பிரபலங்கள் இரங்கல் பதிவு:

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார் என்று கூறி இருக்கிறார். இவரை அடுத்து மாரி செல்வராஜ்,, பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, த்ரிஷா போன்ற பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

Advertisement