விரைவில் அரசியல் பிரசேவம் – கமல்ஹாசன் உறுதி.!

0
659
Kamal Hasan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழகத்தில் ஒருபுறம் நிலையற்ற ஆட்சி ஏற்பட்டலாலும்,மற்றொரு புறம் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம்.
Kamal Hasan
கமல்,ரஜினி,விஜய்,விஷால் போன்றோர் அரசியலுக்கு வருவது பற்றி யோசித்துவருவதாகவும் அவர்கள் அரசியல்கட்சி தொடங்கவுள்ளதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ச்சியாக வந்தவண்ணமே உள்ளன.அனைவரையும் பின்னுக்கு தள்ளி கமல் சற்று ஒருபடி மேலே போய் “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக அரசியல் கருத்துகள் கூறிவரும் நிலையில் டிவிட்டரிலும் கலக்கி வருகின்றார்.

இவரது அரசியல் தாக்குதலை சமாளிக்க முடியாத ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது இ-மெயில் ஐடி மற்றும் செல்போன் எண்களை இணையத்தில் இருந்து அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Kamal Hasanஇந்நிலையில் கமல்ஹாசனுக்கு நெருங்கிய நண்பர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருவதாகவும் ஆயுதபூஜையில் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது எனவும் கமலின் முடிவு குறித்து இன்னும் நற்பணி மன்ற நிர்வாக தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ செய்தி தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.Kamal Hasan
இதையும் படிங்க: சிநேகன் தோற்றதாக அறிவித்தது தவறு..சினேகனுக்கு சப்போர்ட்டாக பேசும் ஆர்த்தி.!

கமல் முதலில் கட்சி தொடங்கப்போகிறாரா அல்லது விஷால் தனது அரசியல் கட்சியை முதலில் தொடங்கப்போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.