உடல் நல குறைவில் கமல், ஷூட்டிங்கை முடித்த சிம்பு – இந்த வாரம் பிக் பாஸ் Host யார் ? ஒரு வேல அப்படி பண்ணுவாங்கலோ.

0
141
simbu
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியானது கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது பிரச்சனைக்கு பஞ்சமில்லை என்பதை போல விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளை போல இல்லாமல் இந்த சீசன் 21 போட்டியாளர்கள் தொடக்கத்திலேயே பங்கேற்றனர். மற்ற சீசன்களை போல இந்த சீசனிலும் உலகநாயகன் கமலஹாசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.

-விளம்பரம்-

தன்னுடைய சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிய கமல்ஹசன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். தொடந்த பல திரைப்படங்களில் நடித்து வந்த கமலஹாசன் அவர்கள் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் முன்னி நடிகர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.

- Advertisement -

இப்படமானது எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரியளவில் ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது.இப்படத்தினை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும், இந்தியன் பகுதி2 படத்திலும் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதல் இன்று வரை தொடர்ந்து தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த கமலஹாசன் அவர்கள் தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 23ஆம் தேதி ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த கமலஹாசன் லேசான காய்ச்சல், இருமல், ஜுரம் இருந்ததினால் அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது மருத்துவமனை கொடுத்திருக்கும் அறிக்கையின் படி கமலஹாசனின் உடல்நிலை வெகுவாக சரியாகி வருவதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் விடு திரும்பி விடுவார் எனவும் கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த நடிகர் கமல்ஹசனின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இருப்பினும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் பங்குபெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போது கமலுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அப்போது வீடியோ கால் மூலம் தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து கமலுக்கு பதில் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் இந்த வாரம் கமல் வீடியோ கால் மூலம் தொகுத்து வழங்குவாரா இல்லை அவருக்கு பதில் சிம்பு வருவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம். சமீபத்தில் தான் சிம்பு பத்து தல படப்பிடிப்பை நிறைவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement