சென்ராயனை ஏமாற்றிய பிக்பாஸ்.! ஐஷ்வர்யாவுக்கு எதிராக கமல் எடுத்த புதிய அதிர்ச்சி முடிவு

0
201
Sendrayan

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ராயன் வெளியேற்றபட்டார் என்று கமல் அறிவித்தும் அரங்கத்தில் ஒரு மையான அமைதியே நிலவியது. பின்னர் சென்ராயனிடம் கமல் பேசிக்கொண்டிருக்கையில் சற்றும் சம்மந்தமே இல்லாமல் குறுக்கே பேசிய ஐஸ்வர்யா, சென்ராயன் மிகவும் நல்ல மனுஷன் என்று கூறியதும் உங்களுக்கு அந்த பொறுப்பு கிடையாது ஒக்கறுங்க என்று கமல், ஐஸ்வர்யா கூறிவிடுகிறார்.

bigg-boss

தொடர்ந்து பேசிய கமல், ஒரே ஒரு தியாகம் வேணும்னா பண்ணலாம். இத நான் சொல்லல ஆடியன்ஸ்கிட்ட இருந்து உணர்ந்த ஒரு விஷயம், தப்பா கூட இருக்கலாம். அவரை (சென்ராயன்) பத்தி உங்களுக்கு ஒரு நல்ல கருத்து இருக்கிறது என்றால் அவருக்கு பதிலாக நீங்க போங்க என்று ஐஸ்வர்யாவிடம் கேட்கிறார் கமல்.

அதற்க்கு ஐஸ்வர்யா,நானும் அதை தான் சொல்ல வந்தேன் சார் என்றதும் நீங்க உண்மையாக அவருக்கு பதிலா போறீங்கனு சொல்றீங்களா. ஆனால், அது போல நடக்காது எல்லாம் ஆடியன்ஸ் முடிவு பண்ணிட்டாங்க என்று கமல் கூறிவிடுகிறார்.

Sendrayan

ஐஸ்வர்யா, இந்த வாரமும் காப்பற்றபட்டது மக்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால்,நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதியில் பேசிய கமல்,அடுத்த வாரம் நேரடி நாமினேஷனில் ரித்விகா மட்டும் தான் தனித்து இருக்கிறார். அது எனக்கு நியாயமாக தோன்றவில்லை. வீட்டுக்குள் இருப்பவர்கள் இன்னும் மூன்று பெயரை நாமினேட் செய்ய வேண்டும். அதில் ஐஸ்வர்யா பெயர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கமல், ஐஷ்வர்யாவை அடுத்தவாரம் நாமினேஷனில் இடம்பெற வேண்டும் என்று கூறியதை மக்கள் வரவேற்றனர்.ஆனால், ஒருவேளை அடுத்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டுவிட்டால் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதே போல இந்த நிகழ்ச்சிக்கி இருக்கும் மீதமுள்ள ரசிகர்களும் இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.